பட்ஜெட் விலையில் 50MP கேமராவோடு ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ அறிமுகம் | இந்த போன் பற்றிய முக்கியமான விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
19 August 2021, 2:05 pm
Redmi 10 goes official
Quick Share

சியோமி தனது ரெட்மி 10 பட்ஜெட் ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போன் புதிய சிப்செட், மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பு மற்றும் பல அம்சங்களோடு வருகிறது. புதிய சியோமி ரெட்மி 10 பற்றிய முக்கியமான விவரங்கள் இங்கே.

ரெட்மி 10 6.5-இன்ச் FHD+ டிஸ்பிளே உடன் 90 Hz மாறும் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதனால் உங்கள் தொலைபேசியின் பேட்டரி  வீணாக்காதபடி, பணியின் படி தானாகவே அதன் புதுப்பிப்பு வீதத்தை தானாகவே சரிசெய்ய உதவுகிறது. இந்த போனில் சன்லைட் டிஸ்பிளே மற்றும் ரீடிங் மோட் 3.0 போன்ற அம்சங்களும் உள்ளது. இந்த போன் மீடியாடெக் ஹீலியோ G88 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது மற்றும் இவை 4GB+64GB, 4GB+128GB மற்றும் 6GB+128GB மூன்று சேமிப்பு உள்ளமைவுகளில் கிடைக்கும்.

தொலைபேசியில் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இது 50 MP மெயின் கேமரா, 8 MP தீவிர அகல கேமரா மற்றும் இரண்டு 2 MP மேக்ரோ மற்றும் ஆழ சென்சார்கள் கொண்டது. முன்பக்கத்தில் ஒற்றை 8 MP கேமரா மைய-சீரமைக்கப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

இது தவிர, போனில் இரட்டை ஸ்பீக்கர் அமைப்பு மற்றும் 3.5 மிமீ தலையணி போர்ட் உள்ளது. பவர் பட்டனுடன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12.5 உடன் இந்த போன் இயங்குகிறது.

ரெட்மி 10 போனின் 4GB+64GB, 4GB+128GB மற்றும் 6GB+128GB மாடல்கள் முறையே $179, $199 மற்றும் $219 விலைகளில் வாங்க கிடைக்கும். இந்த சாதனம் கார்பன் கிரே, பெப்பிள் ஒயிட் மற்றும் சீ ப்ளூ எனப்படும் மூன்று வண்ண வகைகளில் கிடைக்கும். 

இந்த பட்ஜெட் சாதனம் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை ஆனால் இது சில மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இதை சியோமி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

தொலைபேசி இந்தியாவிற்கு வரும்போது, ரூ.10,000 விலைபிரிவில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் சாதனம் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1, சாம்சங் கேலக்ஸி M02s மற்றும் ரெட்மியின் சொந்த நோட் 9 தொடர் போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடக்கூடியதாக இருக்கும்.

Views: - 637

0

0