90 Hz டிஸ்ப்ளே மற்றும் 6000 mAh பேட்டரி உடன் பட்ஜெட் விலையில் Redmi 10 Prime அறிமுகம் | முழு விவரங்கள் இங்கே

Author: Dhivagar
3 September 2021, 3:02 pm
Redmi 10 Prime with 90Hz display and 6000mAh battery launched
Quick Share

சியோமி தனது புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி 10 பிரைமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் புதிய TWS Redmi Earbuds 3 Pro உடன் ஆன்லைன் நிகழ்வின் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 மாடலுக்கு அடுத்தபடியாக 90 Hz டிஸ்ப்ளே மற்றும் 6000 mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ G88 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு RAM கட்டமைப்புகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இதன் விலை ரூ.12,499 முதல்  தொடங்குகிறது. 

இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் சமீபத்தில் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 10 இன் மறுபெயரிடப்பட்ட மாறுபாடு தான். இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாட்டில் உலகளாவிய வேரியண்டில் இருந்த 5000mAh பேட்டரிக்கு பதிலாக ஒரு பெரிய 6000mAh பேட்டரியை பேக் உள்ளது.

இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் விலை மற்றும் சலுகைகள்

  • இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் போனின் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ.12,499 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி இந்த மாடலின் இன்டெர்னல் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்க முடியும். இந்த போனின் 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.14,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த மாடலில் ஸ்டோரேஜை 2TB வரை விரிவாக்கலாம். 
  • எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பயன்படுத்தி போனை வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.750 தள்ளுபடி பெறலாம். 
  • mi.com, அமேசான் இந்தியா மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து செப்டம்பர் 7 முதல் இந்த தொலைபேசி வாங்க கிடைக்கும்.

ரெட்மி 10 பிரைம் அம்சங்கள் மற்றும் குறிப்புகள்

  • ரெட்மி 10 பிரைம் பின்புறத்தில் பாலிகார்பனேட் பேனல் அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 192 கிராம் எடைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு HD+ டிஸ்பிளே உடன் வருகிறது. 
  • இது 90 Hz refresh rate ஐ ஆதரிக்கிறது. இது ஒரு அடாப்டிவ் டிஸ்பிளே, அதாவது திரையில் என்ன பிளே ஆகிறது என்பதைப் பொறுத்து வெவ்வேறு புதுப்பிப்பு விகிதங்களுக்கு மாற முடியும். தொலைபேசி கார்னரிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது.
  • ரெட்மி 10 பிரைம் மீடியாடெக் ஹீலியோ G88 SoC சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. சியோமி ஆடியோவுக்கென டூயல் ஸ்பீக்கர் அமைப்பைப் பயன்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12.5 இல் இயங்குகிறது. மென்பொருள் இப்போது MIUI இன் முந்தைய பதிப்புகளை விட மிகவும் தெளிவாக உள்ளது.
  • ரெட்மி 10 பிரைம் 6000mAh பேட்டரியை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது. இருப்பினும், சியோமி 22.5W ஃபாஸ்ட் சார்ஜர் உடன் தொலைபேசியை வழங்குகிறது. சாதனம் 9W ரிவர்ஸ் வயர் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

Views: - 440

0

0