அக்டோபர் 27 அன்று அறிமுகமாகிறது இந்த புத்தம் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்

25 October 2020, 9:51 pm
Redmi K30S to be announced on October 27
Quick Share

சியோமி ரெட்மி K30S ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொலைபேசி அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். ரெட்மி K30S, சியோமி Mi 10 T ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

வெய்போவின் போஸ்டர்களின்படி, ரெட்மி K30S கருப்பு மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் வரும். இது 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட செவ்வக வடிவ டிரிபிள் கேமரா அமைப்புடன் வரும்.

முந்தைய தகவல்களின்படி, ரெட்மி K30S 6.67 அங்குல IPS LCD FHD+ டிஸ்ப்ளே 144Hz புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடர் இருக்கும். இது 5 ஜி நெட்வொர்க்குகளுக்கான ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி உடன் இயக்கப்படும்.

தொலைபேசியில் 12 ஜிபி LPDDR 5 ரேம் மற்றும் 512 ஜிபி வரை UFS 3.1 ஸ்டோரேஜ் இருக்கும். இந்த சாதனம் கூகிளின் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையை MIUI 12 ஸ்கின் உடன் இயக்கும், மேலும் இது 5,000mAh பேட்டரியை 33W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் இயக்கும்.

ரெட்மி K30S 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்திற்கு 20 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும்.

Views: - 17

0

0