ரெட்மி நோட் 10 வெறும் ரூ.17,000 க்கு கிடைக்கிறதா? இது உண்மையா அல்லது போலியா?

25 February 2021, 6:10 pm
Redmi Note 10 Is On Sale For Just Rs. 17,000: Real Or Fake?
Quick Share

இந்தியாவில் ரெட்மி நோட் 10 தொடர் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. பல கசிவுகள் மற்றும் ஊகங்கள் வரவிருக்கும் தொலைபேசியைப் பற்றி தகவல்களை நமக்கு வழங்கி வந்தன. இப்போது, ​​இன்ஸ்டாகிராமில் ஒரு விற்பனையாளர் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவதற்கு முன்பே தன்னிடம் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Ansis Mobile என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ரெட்மி நோட் 10 போனின் குறுகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், மேலும் இந்த சாதனம் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாறுபாடு ரூ.17,000 விலையுடன் வருவதாக தெரிவித்துள்ளார்.

வீடியோவின் படி, ரெட்மி நோட் 10 ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் (ஒருவேளை AMOLED) வரும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் பின்புறத்தில் ஒரு தனித்துவமான கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது, இது சியோமி Mi 11 இல் உள்ள கேமரா யூனிட்டுக்கு ஒத்திருக்கிறது.

ஸ்மார்ட்போனில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் போன்ற ஒரு பிளாஸ்டிக் பிரேம் கொண்ட கண்ணாடி பின் பேனல் இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமல்ல, ஸ்மார்ட்போனின் மேற்புறத்தில் ஒரு சிறப்பு கட்அவுட் இருப்பதால், ரெட்மி நோட் 10 ஒரு ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்போடும் வரக்கூடும்.

ரெட்மி நோட் 10 குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, ஒருவேளை 48MP அல்லது 64MP முதன்மை சென்சார் இருக்கலாம். மற்ற மூன்று சென்சார்கள் வைடு ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் ஆழம் சென்சார் ஆகியவையாக இருக்கலாம்.

மென்பொருளைப் பொறுத்தவரை, சாதனம் MIUI 12 இல் இயங்குகிறது, இது அநேகமாக Android 11 OS ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும், இது ஒரு புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலியா அல்லது உண்மையா?

படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கும்போது, ​​இது உண்மையானதாக தான் தெரிகிறது. ரியல்மீ ரெட்மி நோட் 10 இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இருப்பினும், இப்போதைக்கு, இந்த விற்பனையாளர் இன்னும் தொடங்கப்படாத ஒரு சாதனத்தை எப்படி பெற முடிந்தது என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

Views: - 6

0

0