ரெட்மி நோட் 9, Mi 10T மற்றும் பல சியோமி ஸ்மார்ட்போன்களின் விலை திடீர் குறைப்பு! சீக்கிரம் முந்திக்கோங்க

2 February 2021, 4:34 pm
Redmi Note 9, Mi 10T, And More Xiaomi Smartphones Get Price Cut In India For Limited Period
Quick Share

சியோமி தனது சில ஸ்மார்ட்போன்களான Mi 10T, ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 புரோ, ரெட்மி நோட் 9, ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 8 டூயல் போன்ற ஸ்மார்ட்போன்களின் விலைகளைக் குறைத்துள்ளது. நீங்கள் ஏதேனும் இடைப்பட்ட அல்லது பட்ஜெட் சியோமி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதற்கான சரியான நேரம் இதுவாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில், நீங்கள் ரூ.3,000 வரை தள்ளுபடிகளை பெற முடியும்.

91Mobiles அறிக்கையின்படி, விலைக் குறைப்பு பிப்ரவரி 15 வரை மட்டுந்தான் பொருந்தும். அதுவும், தள்ளுபடி ஆஃப்லைன் கடைகளுக்கு மட்டுமே கிடைக்கும், இ-காமர்ஸ் தளங்களில் அசல் விலையிலேயே விற்கப்படும்.

சியோமி சாதனங்களின் புதிய விலை இங்கே

பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி 8A டூயல் ரூ.8,999 விலைக்கு பதிலாக 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.7,999 விலையில் கிடைக்கும். அதே போல் ரெட்மி 9 பிரைம் போனையும் ரூ.1,000 தள்ளுபடியுடன் அசல் விலையான ரூ. 11,999 க்கு பதிலாக ரூ.10,999 விலையில் வாங்கலாம்.

மறுபுறம், ரெட்மி நோட் 9, ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் உள்ளிட்ட ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் ரூ. 2,000 தள்ளுபடி உடன் கிடைக்கும்.

ரெட்மி நோட் 9 இன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 12,999 விலையுடனும், மற்றும் ரூ. 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.13,999 விலையிலும் கிடைக்கும். 

ரெட்மி நோட் 9 புரோ 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ.12,999 விலைக்கும் மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு ரூ.13,999 விலையுடன் கிடைக்கும்.

மேலும், ரெட்மி 9 புரோ மேக்ஸின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இப்போது ரூ.14,999 விலையிலும் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹை-எண்ட் மாடல் ரூ. 17,499 விலையிலும் கிடைக்கும்.

கடைசியாக, நீங்கள் ஒரு உயர்நிலை சாதனத்தைத் தேடுகிறீர்களானால், Mi 10T க்கு செல்லலாம், இதன் இரு ஸ்டோரேஜ் மாடல்களும் ரூ.3,000 தள்ளுபடியுடன் கிடைக்கும். Mi 10T யின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.35,999 க்கு பதிலாக ரூ.32,999 விலையில் கிடைக்கும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.37,999 க்கு பதிலாக 34,999 ரூபாய்க்கு கிடைக்கும்.

Views: - 0

0

0