குறைந்த விலையிலான 4ஜி போன்களுக்காக மிகப்பெரிய நிறுவனத்துடன் கைகோர்க்கிறது ரிலையன்ஸ்

28 September 2020, 3:57 pm
Reliance Industries Might Join Hands With United Telelinks For 4G Smartphones
Quick Share

தொலைத் தொடர்புத் துறையில் தனது கால் தடத்தை திடமாக பதித்த பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இப்போது ஸ்மார்ட்போன் சந்தையிலும் இறங்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் யுனைடெட் டெலிலிங்க்ஸை கையகப்படுத்தும் அல்லது அந்நிறுவனத்துடன் உற்பத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கே.கே.ஆர், கூகிள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட 13 முதலீட்டாளர்களிடமிருந்து ரிலையன்ஸ் ஜியோ நிதி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், நிறுவனம் இன்னும் சில்லறை விற்பனையில் பங்குகளை விற்பனை செய்து வருவதால் இது இன்னும் பேச்சு வர்த்தை நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. தவிர, நிறுவனம் ஸ்மார்ட்போன்களை பல சிறப்பான சலுகைகளுடன் கொண்டு வர வாய்ப்புள்ளது என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதற்கெனில், அனைத்து 2 ஜி வாடிக்கையாளர்களையும் வரவிருக்கும் மலிவு விலையிலான 4ஜி கைபேசிகளுக்கு மாற்ற ரிலையன்ஸ் விரும்புகிறது. 

ரிலையன்ஸ் நிறுவனமும் அரசாங்க PLI திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்று தெரிகிறது, ஆனால் இந்த நடவடிக்கை சீன கைபேசி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவர்களில் யாரும் 4 ஜி கைபேசியை ரூ.4,000 விலையில்  செய்யவில்லை.

PLI திட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்:

இந்தியாவில் தயாரிப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (product Linked Incentive scheme – PLI) என்பது அனைத்து உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் அவர்கள் நாட்டில் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த முடியும். இதுதவிர, இந்த திட்டம் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி வழிகளை மேம்படுத்த முடியும்.

இத்திட்டம் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது, மேலும் 12 நிறுவனங்கள் இதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது, அதில் ஏழு உள் நாட்டு மற்றும் ஐந்து சர்வதேச நிறுவனங்கள் இருக்கும். உள்ளூர் நிறுவனங்களின் பட்டியலில் டிக்சன் டெக்னாலஜிஸ், லாவா குழு, மைக்ரோமேக்ஸ், யுனைடெட் டெலிலிங்க்ஸ் மற்றும் ஆப்டீமஸ் இன்ஃப்ரா ஆகியவை அடங்கும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. மறுபுறம், சாம்சங், ஆப்பிள், ஹான் ஹை, ஃபாக்ஸ்கான், ரைசிங் ஸ்டார், பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளது.

Views: - 2

0

0