எதிர்பாரா கூட்டணி: ஏர்டெல் உடன் புதிய திட்டத்திற்கு கையெழுத்திட்ட ரிலையன்ஸ் ஜியோ!

7 April 2021, 4:14 pm
Reliance Jio inks deal with Airtel to expand spectrum footprint in Delhi, Mumbai, AP
Quick Share

பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை (6 ஏப்ரல், 2021) அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆந்திரா, டெல்லி மற்றும் மும்பை ஆகிய தொலைத் தொடர்பு வட்டாரங்களில் 800 MHz பேண்ட் அலைக்கற்றை பயன்படுத்துவதற்கான உரிமையை ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் இடமிருந்து பெற்றுள்ளது.

ஆந்திராவில், 800 MHz பேண்ட் ஸ்பெக்ட்ரமில் 3.75 MHz பயன்படுத்துவதற்கான உரிமையை நிறுவனம் பெற்றுள்ளது, டெல்லி மற்றும் மும்பையில் இந்த எண்ணிக்கை முறையே 1.25 MHz மற்றும் 2.50 MHz ஆக உள்ளது. இது மொத்தமாக வாங்கிய அலைக்கற்றில் 7.50 MHz ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ இந்த ஸ்பெக்ட்ரமைப் பயன்படுத்துவதற்காக சுமார் ரூ.1,497 கோடி செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பிறகு செலுத்த இருக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ள ரூ.459 கோடியும் அடங்கும்.

ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான இந்த வர்த்தகத்தின் மூலம், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் மும்பை வட்டத்தில் 800 MHz பேண்டில் 2X15MHz அலைக்கற்றையும் மற்றும் ஆந்திரா மற்றும் டெல்லி வட்டங்களில் 800 MHz பேண்ட்டில் 2X10MHz ஸ்பெக்ட்ரம் கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த பிராந்தியங்களில் நிறுவனத்தின் அலைக்கற்றைகளை விரிவாக்க உதவும்.

இந்திய அரசு நடத்திய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இந்தியா முழுவதும் உள்ள 22 வட்டங்களிலும் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையை ரூ.1,497 கோடி கொடுத்த பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த அறிவிப்பை வெளியிடும் நேரத்தில், சமீபத்திய ஏலத்தில், நிறுவனம் இப்போது 800 MHz பேண்டில் மொத்தம் 133.75 MHz அலைக்கற்று, 1800 MHz பேண்டில் 74.60 MHz அலைக்கற்று மற்றும் நாட்டின் 22 டெலிகாம் வட்டாரங்களில் 2300 MHz பேண்டில் 280 MHz அலைக்கற்று ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Views: - 1

0

0