அவசரத்துக்கு உதவும் டேட்டா லோன்! ரிலையன்ஸ் ஜியோவைப் புகழ்ந்து தள்ளும் பயனர்கள் | Jio Emergency Data Loan

3 July 2021, 5:00 pm
Reliance Jio launches emergency data loan
Quick Share

ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லா அவசர தேவைக்கு போனில் பேலன்ஸ் இல்லையென்றால் உடனே யாரையேனும் அழைக்க டாக்டைம் லோன் பெறும் வசதியை  அறிமுகபடுத்தினர். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ அழைப்பு சேவையை இலவசமாக வழங்குவதால் ஒரு படி மேலே சென்று டேட்டா லோன் வழங்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

உங்கள் ஜியோ நெட்வொர்க்கில் டேட்டா தீர்ந்து விட்டால் 1 ஜிபி டேட்டா வவுச்சராக ஐந்து டேட்டா வவுச்சர் வரை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த புதிய அவசர டேட்டா லோன் வசதி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட தரவு முடிந்த பிறகு அவசர தேவைகளுக்கு  உடனடியாக ரீசார்ஜ் செய்ய முடியாதவரக்ளுக்கு ‘இப்போது ரீசார்ஜ் செய்து பின்னர் பணம் செலுத்துங்கள்’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் உடனே லோன் பெற்றுக்கொண்டு பின்னர் செலுத்தலாம். புதிய சலுகையின் கீழ், ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 1 ஜிபி வவுச்சராக 5 வவுச்சரைக் கடன் ஆக வழங்கும், மேலும் ஒவ்வொரு பேக்கிற்கும் ரூ.11 விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

ஜியோவிலிருந்து அவசரத்திற்கு டேட்டா லோன் பெறுவது எப்படி?

  • உங்கள் ஸ்மார்ட்போனில் MyJio பயன்பாட்டைத் திறந்து, பக்கத்தின் மேல் இடதுபுறத்தில் உள்ள ‘Menu’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • Mobile Services பிரிவின் கீழ் இருக்கும் ‘Emergency Data Loan’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘Proceed’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • ‘Get Emergency Data’ எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அவசர கடன் பலனைப் பெற ‘Activate Now’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அவ்வளவுதான்!

இது தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறைய ப்ரீபெய்ட் டேட்டா திட்டங்களை வழங்குகிறது. எனவே, பயனர்கள் பட்ஜெட் தரவுத் திட்டங்களை முன்கூட்டியே வாங்கி கொண்டு தேவைப்படும்போது செயல்படுத்தலாம். வரவிருக்கும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்தும்போது, ​​தற்போதைய திட்டத்தின் வேலிடிட்டி அதற்கும் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க. புதிய திட்டம் உடனே செயல்படத் தொடங்கும். ஜியோவின் இந்த சமீபத்திய அறிமுகத்தை பயனர்கள் அனைவரும் ஆஹா ஒஹோ என்று பாராட்டி வருகின்றனர். விரைவில் ஏர்டெல் மற்றும் Vi நிறுவனங்களும் இதே போன்ற சேவையை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 177

0

0