ரூ.25,999 விலையில் ஜியோ எக்ஸ்டெண்டர் 6 AX6600 வைஃபை 6 மெஷ் அறிமுகம்!

28 February 2021, 6:40 pm
Reliance Jio Launches JioExtender6 AX6600 Wi-Fi 6 Mesh
Quick Share

ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ எக்ஸ்டெண்டர் 6 AX6600 வைஃபை 6 மெஷ் எனும் புதிய வைஃபை சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் ஏற்கனவே நிறுவனத்தின் இணையதளத்தில் நேரலையில் உள்ளது மற்றும் 1 Gbps வேகத்துடன் வைஃபை 6 ஐ ஆதரிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ வைஃபை சாதனத்தை அறிமுகப்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஆனால், ஏற்கனவே ரூ.2,499 விலையில் கிடைக்கும் ஜியோ எக்ஸ்டெண்டர் சமீபத்திய தரங்களை ஆதரிக்கவில்லை.

JioExtender6 AX6600 Wi-0Fi 6 மெஷ் விலை விவரங்கள்

ஜியோ எக்ஸ்டெண்டர் 6 AX6600 வைஃபை 6 மெஷ் விலை ரூ.25,999 மற்றும் ஜியோவின் இணையதளத்தில் Mobility > Devices > Accessories என்ற பிரிவின் கீழ் கிடைக்கிறது. தவிர, வைஃபை சாதனம் ரூ.1,223.86 விலைகளிலான EMI விருப்பத்துடனும் கிடைக்கிறது. இந்த மெஷ் சாதனம் ஒரு வருட உற்பத்தியாளர் உத்தரவாதமும், அடாப்டரில் ஆறு மாத உத்தரவாதத்துடனும் வருகிறது.

சாதனத்தின் விவரக்குறிப்புகள்

நிறுவனத்தின் வலைத்தளத்தில் உள்ள தகவலின்படி, JioExtender6 AX6600 வைஃபை 6 மெஷ் நான்கு மடங்கு நெட்வொர்க் திறனை வழங்க முடியும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சாதனம் எந்த இடத்திலும் Dark Spot என்பது இல்லாமல் அனைத்து இடங்களிலும் போதுமான இணைய சேவைகளை வழங்க போதுமானது என்றும் நிறுவனம் கூறுகிறது.

மேலும், ஜியோ எக்ஸ்டெண்டர் 6 AX6600 வைஃபை 6 மெஷ் சாதனம் 1 Gbps வேகத்தை வழங்கும் மற்றும் 5 GHz நெட்வொர்க்கை 38 சதவிகிதம் உயர்த்த முடியும், அதே நேரத்தில் 2.4 GHz நெட்வொர்க்கின் வைஃபை 5 ஐ விட 90 சதவீதம் அதிகரிக்கும்.

ஜியோ எக்ஸ்டெண்டர் 6 AX6600 வைஃபை 6 மெஷ் சாதனம் 128MB Nand மற்றும் 256MB RAM உடன் வருகிறது. இது ஒரு குவாட் கோர் செயலி, எட்டு ஆண்டெனாக்கள், உயர் சக்தி பெருக்கிகள் மற்றும் AX6600 வைஃபை 6 ஆதரவு, ஈஸிமெஷ் R1 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Views: - 1

0

0