மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யக்கூடிய கான்கிரீட் சாலை?! புதிய சாதனைப் படைக்க தயாராகும் ஆராய்ச்சியாளர்கள்

Author: Hemalatha Ramkumar
20 August 2021, 5:50 pm
Researchers Are Working On Creating Concrete That Can Charge Electric Vehicles
Quick Share

எதிர்காலம் என்பது மின்சார வாகனங்கள் என்றாகிவிட்டது. ஆனால், மிகப்பெரிய சவால் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வது தான். இதற்கு என்ன தான் தீர்வு என்று உலகமே பல ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது. 

ஆனால், சாலைகளில் செல்லும் போது காண்கிரீட் சாலைகளே மின்சார கார்களை சார்ஜ் செய்யக்கூடிய வசதி உடன் இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? 

ஆனால் சிந்திக்க இது வெறும் கருத்து மட்டும் இல்லை. ஏனென்றால், இந்த தொழில்நுட்பத்திற்கான யோசனை கருத்து வடிவில் இருந்து முன்மாதிரி வடிவம் வரை சென்றுவிட்டது. இருப்பினும் அவை தற்போது நடைமுறைக்கு மாறானவை மற்றும் மிகவும் விலை உயர்ந்தவை. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியானாவின் போக்குவரத்துத் துறை (INDOT) இப்போது ஒரு புதிய வகை சிமெண்ட் தயாரிப்பில் வேலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகையிலான செய்மின்ட் காந்தமயமாக்கப்பட்ட துகள்களைக் கொண்டிருக்கும், அவை மின்சார வாகனங்களை-சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கும் என்பதால், இந்த சிமென்டில் கான்கிரீட்  சாலைகளை அமைப்பது குறித்து யோசனைகள் நடந்து  வருகிறது. ஆனால், இந்த வகையிலான சிமெண்ட் உடன் புதிய சாலைகளை கட்டமைக்க உள்கட்டமைப்பு செலவுகள் அதிகமாக ஆகும்.

இந்த திட்டத்திற்கு, பர்டூ பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மன் நிறுவனமான மேக்மென்ட் உடன் இணைந்து தேசிய அறிவியல் அறக்கட்டளை நிதியளித்துள்ளது. அவர்கள் மூன்று கட்டங்களாக ஆராய்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

காந்தமயமாக்கப்பட்ட சிமென்ட் (மேக்மென்ட்) முதலில் ஆய்வக நிலைமைகளில் வேலை செய்யுமா என்று சோதிக்கும் கட்டமாக முதல் கட்டம் இருக்கும். பின்னர் இது சாலையின் கால் மைல் பகுதி முழுவதும் சோதிக்கப்படும்.

மேக்மென்ட் எனும் சிமெண்டைப் பொறுத்தவரையில், இந்த பொருள் 95 சதவிகிதம் வரை வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் செயல்திறனை வழங்கும் திறன் கொண்டது. மேலும், இது மின்சார சாலைகளை உருவாக்க உதவுகிறது மற்றும் இது அழிவில்லாதது ஆகும்.

ஃபெரைட் துகள்களைச் சேர்த்து உருவாக்கப்படும் இந்த சாலைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டால், மேலும் செலவுகளைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இறுதி கட்டத்தில், குறைந்தபட்சம் 200 கிலோவாட் அதிக சக்தியில் இயங்கும் கனரக மின்சார லாரிகளை சார்ஜ் செய்ய சாலைகளின் திறனை சோதிக்க INDOT திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றவுடன், இந்த தொழில்நுட்பம் இந்தியானா மாநிலத்தில் உள்ள பொது மாநிலங்களுக்கு இடையேயான பகுதிகளை மின்மயமாக்க INDOT ஆல் பயன்படுத்தப்படும்.

INDOT இன் இந்த முயற்சி வெற்றி அடைந்தால், மின்சார வாகனங்கள் உடன் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

Views: - 363

0

0