“தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்” | ரிச்சர்ட் பிரான்சனுக்கும் கடலூருக்கும் உள்ள கனெக்ஷன் என்ன தெரியுமா?

14 July 2021, 3:42 pm
Richard Branson know his Indian roots
Quick Share

வருகின்ற ஜூலை 18 ஆம் தேதி தனது 71 வது பிறந்தநாளை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக கடந்த ஜூலை 11 அன்று விண்வெளியின் எல்லைக்குச் சென்று திரும்பினார் விர்ஜின் கேலக்டிக் நிறுவன தலைவரும் பிரபல கோடீஸ்வரருமான ரிச்சர்ட் பிரான்சன். விண்வெளியின் எல்லைக்குச் சென்று திரும்புவதையே தனது வாழ்நாள் கனவாக கொண்டிருந்தார் பிரான்சன். பல முயற்சிகளுக்கு பிறகு கடந்த ஜூலை 11 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று திரும்பினார். பிரான்சன் உட்பட 6 பேர் கொண்ட விண்வெளியின் எல்லைக்குச் சென்று மீண்டும் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்து புதிய சாகப்தத்தையே உருவாகியுள்ளது விர்ஜின் குழுமம். 

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். விண்வெளிக்கு சென்று திரும்பி உலகையே வியக்க வைத்த இவருக்கும் தமிழகத்துக்கும் குறிப்பாக கடலூருக்கும் ஒரு இணைப்பு உள்ளது. அதென்ன இணைப்பு அதற்கான பிளாஷ்பேக்கைப் பார்க்கலாம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு  கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் மும்பையில் இருந்து லண்டனுக்கு விமான சேவையைத் தொடங்குவது தொடர்பாக இந்தியா வந்திருந்தார். அப்போது மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,  அவரின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது தான் உண்மை என்று தெரிவித்தார். எனது குடும்ப முன்னோர்களில் சிலரின் DNA வை பரிசோதனை செய்ததில் அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், எனது முன்னோர்கள் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இது 1793 ஆம் ஆண்டிற்கு முந்தைய பந்தம் என்பதை அவரே கூறினார்.

1793 முதல் நான்கு தலைமுறைகளாக அவரின் குடும்பம் கடலூரில் தான் இருந்தார்கள் என்றும் கூறினார். அவரின் கொள்ளு தாத்தா ஒருவர் ஆரியா என்ற தமிழ் பெண்ணை மணந்தார் என்ற தகவலையும் பகிர்ந்துக்கொண்டார்.  

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஜூலை 20 ஆம் தேதி விண்வெளிக்குச் செல்லவிருந்ததை அடுத்து அவருக்கு முன்னதாக விண்வெளியின் எல்லைக்குச் சென்று திரும்பி உலகையே அசர வைத்த ரிச்சர்ட் பிரான்சன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அதிலும் குறிப்பாக தமிழ் வம்சத்தவர் என்பதை அறிந்து இந்தியர்களும் உலக தமிழர்களும் “அட.. நம்ம ஊரு ஆளு யா” என்று பாராட்டி வருகின்றனர்.

Views: - 250

0

0