விண்வெளி பந்தயம்: ஜெஃப் பெசோஸ் Vs ரிச்சர்ட் பிரான்சன் | விண்வெளிக்கு முதலில் போகப்போவது யார்?

2 July 2021, 8:01 pm
Richard Branson will travel into space on July 11
Quick Share

வரும் ஜூலை 20 ஆம் தேதி விண்ணிற்குச் செல்வதாக அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெசோஸ் அறிவித்திருந்த நிலையில் அதற்கு 9 நாட்கள் முன்னதாக ஜூலை 11 ஆம் தேதி விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் Unity 22 விண்கலத்தில் விண்ணிற்குப் பறக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

பிரான்சனின் விர்ஜின் நிறுவனம் வியாழக்கிழமை மாலை அதன் அடுத்த சோதனை பயணம் ஜூலை 11 அன்று அதன் ஆறு நபர்களுடன் நிகழவிருப்பதாக அறிவித்தது.

இந்த விண்கலம் நியூ மெக்ஸிகோவிலிருந்து விண்வெளி செல்ல தயாராக இருக்கும் குழுவினருடன் செல்லும். இது விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் நான்காவது விண்வெளி பயணம் ஆகும்.

ஜூலை 20 ஆம் தேதி பெசோஸ் விண்வெளிக்கு செல்வார் என்று பெசோஸின் ப்ளூ ஆரிஜின் அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது போட்டியின் வெளிப்பாடாக தெரிகிறது. 

இதுகுறித்து ரிச்சர்ட் பிரான்சன் வெளியிட்ட வீடியோவில் விண்வெளிக்கு செல்லவிருக்கும் 6 பேர் கொண்ட குழுவின் விவரங்கள் வெளியானது.

Views: - 168

0

0