சாம்சங் கேலக்ஸி A12, கேலக்ஸி M02s, F02s போன்களின் விலைகளில் மாற்றம் | புதிய விலை விவரங்கள்

9 July 2021, 3:49 pm
Samsung Galaxy A12, Galaxy M02s, F02s price hiked in India
Quick Share

இந்தியாவில் மூன்று சாம்சங் தொலைபேசிகளின் விலைகளை சாம்சங் நிறுவனம் உயர்த்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி F02s, கேலக்ஸி M02s மற்றும் கேலக்ஸி A12 ஆகிய போன்களின் விலைகள் இப்போது ரூ.500 உயர்ந்துள்ளது. இந்த சாதனங்கள் அனைத்தும் இந்தியாவில் மட்டுமே இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் தொலைபேசிகளின் விலைகள் இப்போது சாம்சங் இந்தியா இணையதளத்தில் பிரதிபலிக்கின்றன. இந்த சாம்சங் தொலைபேசிகளின் புதிய விலை விவரங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி F02s விவரக்குறிப்புகள்

ரூ.500 விலை உயர்வுடன், கேலக்ஸி F02s விலை இப்போது ரூ.9,499 முதல் ஆரம்பமாகிறது. 3 ஜிபி RAM + 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் முறையே ரூ.8,999 மற்றும் ரூ.9,999 விலையில் இரண்டு வகைகளில் இந்த தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, ​​இந்த மாடல்களுக்கு முறையே ரூ.9,499 மற்றும் ரூ.10,499 விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி 1560 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.5 அங்குல HD+ TFT டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது.

இதன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல்கள் ஆழம் சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு உள்ளது.

முன் பக்கத்தில், 5 மெகாபிக்சல்கள் கேமரா உள்ளது. இது 15W குயிக் சார்ஜ் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M02s விலை & விவரக்குறிப்புகள்

அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​சாம்சங் கேலக்ஸி M02s போனின் 3 ஜிபி RAM + 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல்கள் முறையே ரூ.8,999 மற்றும் ரூ.9,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. ரூ.500 விலை அதிகரிப்புக்குப் பிறகு, இந்த வகைகளின் விலைகள் முறையே ரூ.9,499 மற்றும் ரூ.10,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி 6.5 இன்ச் HD+ TFT டிஸ்ப்ளே 1560 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. இது 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது.

M02s 15W விரைவு சார்ஜ் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல்கள் ஆழம் சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன் பக்கத்தில், 5 மெகாபிக்சல்கள் சென்சார் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி A12 விலை & விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி A12, 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி. 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளில் முறையே ரூ.12,999 மற்றும் ரூ.13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது ரூ.500 விலை உயர்வுக்குப் பிறகு, அவை இப்போது முறையே ரூ.13,499 மற்றும் ரூ.14,499 விலைகளில் கிடைக்கின்றன.

கேலக்ஸி A12 இன்ஃபினிட்டி-V நாட்ச் மற்றும் 20:9 விகிதத்துடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ P35 ஆக்டா கோர் சிப்செட் உடன் இந்த சாதனம் இயங்குகிறது.

இது 4 ஜிபி RAM மற்றும் 1 TB வரை விரிவாக்க வசதியுடன் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.

இது 48MP முதன்மை சென்சார் உட்பட பின்புற குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடுதலாக, 5MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 2MP மேக்ரோ மற்றும் 2MP ஆழ சென்சார் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

செல்ஃபிக்களுக்கு, ஸ்மார்ட்போனில் 8 MP முன் கேமரா உள்ளது. இது 5,000 mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

Views: - 237

0

0