ஒரு முறை சார்ஜ் செஞ்சா 38 மணி நேரம் பேசிக்கிட்டே இருக்கலாம்| புதிய சாம்சங் கேலக்ஸி A22 பற்றி தெரியுமா?

Author: Dhivagar
2 July 2021, 8:41 am
Samsung Galaxy A22 goes official in India
Quick Share

சாம்சங் நிறுவனம் தனது A-தொடர் ஸ்மார்ட்போன்களை விரிவுபடுத்தும் நோக்கில், சாம்சங் கேலக்ஸி A22 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.18,499 ஆக நிர்ணயம் செய்துள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இது ஸ்மார்ட்போனில் 90 Hz டிஸ்பிளே, 48 MP குவாட் ரியர் கேமரா அமைப்பு, 5,000 mAh பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 38 மணிநேரம் வரை டாக்டைம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு ஆகியவற்றை எல்லாம் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A22 U-வடிவ நாட்ச் வடிவமைப்பு மற்றும் பக்கவாட்டில் பாதுகாப்பிற்காக கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது சதுர வடிவ குவாட் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது.

இந்த சாதனம் 6.4-இன்ச் HD+ (720×1600 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 20:9 என்ற திரை விகிதத்துடன் மற்றும் 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. இது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A22 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 MP (f/1.8) முதன்மை சென்சார், 8 MP (f/2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 MP (f/2.4) மேக்ரோ கேமரா மற்றும் 2 MP (f/2.4) ஆழ சென்சார் ஆகியவை உள்ளது. செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 13MP (f/2.2) கேமரா உள்ளது.

இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி A22 2 GHz ஆக்டா கோர் செயலியில் இருந்து ஆற்றல் பெறுகிறது, இது 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான One UI கோர் 3.1 இல் இயங்குகிறது மற்றும் 15 W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பைப் பொறுத்தவரை, கைபேசி வைஃபை, புளூடூத் 5.0, GPS, ஒரு ஹெட்போன் ஜேக் மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A22 போனின் ஒரே ஒரு 6 ஜிபி / 128 ஜிபி மாடலுக்கான விலை 18,499 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் தற்போது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மட்டுமே வாங்குவதற்கு கிடைக்கிறது. இது விரைவில் மற்ற சேனல்கள் வழியாகவும் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 343

0

0