திடீரென விலைகுறைந்தது சாம்சங் கேலக்ஸி A31! இந்த போன் வாங்கலாமா?

7 April 2021, 8:59 am
Samsung Galaxy A31 Price Slashed
Quick Share

சாம்சங் கேலக்ஸி A32 ஸ்மார்டபோனை அறிமுகம் செய்த பின்னர் நிறுவனம் அதன் முந்தைய பதிப்பான சாம்சங் கேலக்ஸி A31 மாடலின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. நினைவுகூர, கேலக்ஸி A31 கடந்த ஆண்டு நாட்டில் ஒரே ஒரு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் மாடலுக்கு 21,999 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்ப்பட்டது. இரண்டு முறை விலையை குறைத்த பிறகு, அதன் விலை ரூ.17,999 ஆக இருந்தது. இப்போது, மீண்டும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,000 விலைக் குறைக்கப்பட்டு ரூ.16,999 விலையில் கிடைக்கிறது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சாம்சங் ஒரு செய்திக்குறிப்பு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை ப்ரிஸம் க்ரஷ் பிளாக், ப்ரிஸம் க்ரஷ் ஒயிட் மற்றும் ப்ரிஸம் க்ரஷ் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சாம்சங் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்கலாம். மேலும், முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) வழியாக விலை இல்லாத EMI விருப்பங்கள் மூலமாகவும் வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி A31: அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி A31 6.4 இன்ச் FHD+ இன்ஃபினிட்டி-U சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல்  ஸ்டோரேஜ் உடன் இணையாக இருக்கும் கேலக்ஸி A31 இல் செயலாக்கத்தை ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P65 SoC சிப்செட் மூலம் கையாளுகிறது, இது மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி 512 ஜிபி வரை விரிவாக்க முடியும். மென்பொருள் முன்னணியில், தனிப்பயன் ஒன் UI 2.0 ஸ்கின் உடன் ஆண்ட்ராய்டு 10 OS இல் தொலைபேசி இயங்குகிறது.

கேமரா பிரிவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி A31 பின்புற பேனலில் 48 MP முதன்மை கேமரா, 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5 MP ஆழம் சென்சார் மற்றும் 5 MP மேக்ரோ லென்ஸ் உள்ளிட்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு 20 MP சென்சார் உள்ளது. தொலைபேசி அதன் ஆற்றலை 5,000 mAh பேட்டரியிலிருந்து பெறுகிறது, இது 15W வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடன் வருகிறது.

இணைப்பு முன்னணியில், கைபேசி இரட்டை 4G VoLTE, ஒரு யூ.எஸ்.பி டைப்-C போர்ட் மற்றும் புளூடூத் GPS / A-GPS ஆகியவற்றை ஆதரிக்கிறது. கடைசியாக, இது பாதுகாப்பு நோக்கத்திற்காக டிஸ்பிளேவில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இந்த போன் வாங்கலாமா?

கேலக்ஸி A31 இன் அனைத்து அம்சங்களும் அதன் அடுத்த பதிப்பான A32 ஸ்மார்ட்போனிலும் கிடைக்கின்றன. மேலும், மேம்பட்ட வீடியோ பதிவு திறனுடன் 90 Hz refresh rate உடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எனவே, கேலக்ஸி A32 ஸ்மார்ட்போன் அதன் முந்தைய பதிப்பான கேலக்ஸி A31 ஐ விட சிறந்த தேர்வாக இருக்கும். உங்களுக்கு சாம்சங் பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் பிடிக்கும் என்றால் இதை நீங்கள் தாராளமாக வாங்கலாம். ஆனால், இதே விலைப்பிரிவில் சாம்சங் கேலக்சி M31 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: -

0

0