சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2: வெளியாகும் தேதி & முக்கிய விவரங்கள் இதோ உங்களுக்காக

9 April 2021, 12:57 pm
Samsung Galaxy A82 to launch as Galaxy Quantum 2 on April 23
Quick Share

சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இப்போது அதன் கேலக்ஸி A தொடரிலிருந்து அடுத்த தொலைபேசியாக கேலக்ஸி A82 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தொலைபேசி தென் கொரியாவில் ‘கேலக்ஸி குவாண்டம் 2’ (Galaxy Quantum 2) என அறிமுகம் செய்யப்படுவதாகவும், இதன் வெளியீடு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

தொலைபேசியின் படங்கள், அதன் விவரக்குறிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி போன்ற விவரங்களுடன் தென் கொரிய வலைத்தலமான Naver என்பதில் கசிந்துள்ளது. கேலக்ஸி A82 அல்லது கேலக்ஸி குவாண்டம் 2 வெள்ளை நிறத்தில் பின்புறத்தில் மூன்று கேமராக்களுடன்  காணப்படுகிறது. 

இது கேலக்ஸி S21+ மாடலை ஒத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்னொரு புகைப்படம் இரு தொலைபேசிகளையும் ஒன்றாக காட்டுகிறது. ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே உள்ளது, இது முழு HD+ ரெசல்யூஷன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது வரை வெளியான தகவல் கசிவின் படி, கேலக்ஸி A82 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ செயலி உடன் இயக்கப்படும், மேலும் இது 4,500 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். 

தொலைபேசியின் டிரிபிள் கேமரா அமைப்பில் 64 MP முதன்மை கேமரா இடம்பெறும். கேலக்ஸி A82 தொலைபேசியில் தரவு குறியாக்கத்திற்கான குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டர் (QRNG) சிப் இருக்கும். இருப்பினும் இது சாம்சங்கின் சொந்த சந்தையான தென்கொரியாவில் மட்டுமே கிடைக்கும். சாம்சங் கடந்த ஆண்டு, முதல் கேலக்ஸி A குவாண்டம் ஸ்மார்ட்போனை SK டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 90

0

0