29 மணிநேர பேட்டரி லைஃப் உடன் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 அறிமுகம் | அம்சங்கள், விலை பற்றி தெரிஞ்சுக்க இங்க படிங்க

Author: Hemalatha Ramkumar
12 August 2021, 1:48 pm
Samsung Galaxy Buds 2 with ANC, Bluetooth v5.2 launched: Check specs, price and more
Quick Share

சாம்சங் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வான Galaxy Unpacked நிகழ்வை மெய்நிகர் நிகழ்வாக நேற்று நடத்தியது. நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி ஃபிளிப் 3 போன்களை அறிமுகம் செய்தது. அவற்றோடு, கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 சாதனங்களையும் அறிமுகம் செய்தது. கேலக்ஸி பட்ஸ் சிறந்த பேட்டரி லைஃப் வழங்கும் ஒரு இயர்பட்ஸ் ஆக இருக்கும்.

  • கேலக்ஸி பட்ஸ் 2 கிராஃபைட், லாவெண்டர், ஆலிவ் மற்றும் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் வழங்கப்படும். 
  • சுற்றுப்புற சத்தத்தைக் கண்டறிய அதற்கென பிரத்தியேகமாக இரண்டு மைக்ரோஃபோன்களுடன் அவை செயலில் சத்தம் ரத்துசெய்தல் (ANC) அம்சத்தைக் கொண்டுள்ளன. 
  • மேலும், நீங்கள் டைனமிக் இரண்டு-வழி (Two-way) ஸ்பீக்கர்களையும் பெறுவீர்கள். 
  • மூன்று சரிசெய்யக்கூடிய சுற்றுப்புற ஒலி நிலைகள் உள்ளன. 
  • மேலும், நீங்கள் Qi-இணக்கமான குயிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தையும் பெறுவீர்கள், இது ஐந்து நிமிட சார்ஜிங் உடன் 60 நிமிட பிளேபேக்கை உங்களுக்கு வழங்கும். ஒவ்வொரு இயர்பட்ஸும் எடை 5 கிராம் மட்டுமே ஆகும்.
  • முழு சார்ஜில் ANC உடன் ஐந்து மணிநேர ப்ளேபேக் வழங்கும் அதே சமயத்தில் இயர்பட்ஸ் 20 மணிநேரம் வரை நீடித்து இயங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ANC அம்சம் ஆஃப் செய்யப்பட்டால் இந்த இயர்பட்ஸ் 29 மணிநேரம் வரை இயங்கும்.
  • அவை ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், டச் பேட், காது கண்டறிதல் வசதி, கைரோஸ்கோப் மற்றும் காந்த சென்சார் உள்ளிட்ட பல சென்சார்கள் மற்றும் ப்ளூடூத் v5.2 போன்றவற்றுக்கான ஆதரவுடன் வருகிறது.
  • கேலக்ஸி பட்ஸ் 2 கிராஃபைட், ஆலிவ், வெள்ளை மற்றும் லாவெண்டர் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் வருகிறது. அவை அமெரிக்காவில் $150 விலையில் ஆகஸ்ட் 27 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

Views: - 534

0

0