Samsung Galaxy F22 | ரூ.12,500 விலையில் வெளியானது தரமான சாம்சங் கேலக்ஸி F22 | என்னென்ன அம்சமெல்லாம் இருக்கு பாருங்க!

6 July 2021, 3:58 pm
Samsung Galaxy F22 goes official in India
Quick Share

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில் சாம்சங், கேலக்ஸி F22 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ரூ. 12,499 விலையில் பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

  • இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி F22 6,000mAh பேட்டரி, 48 MP குவாட் ரியர் கேமரா தொகுதி, 6.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் மீடியா டெக் ஹீலியோ G80 செயலி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • சாம்சங் கேலக்ஸி F22 ஒரு குறிப்பிடத்தக்க கீழ்பக்க பெசல் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடருடன் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது சதுர வடிவ குவாட் கேமரா அலகு கொண்டிருக்கும்.
  • சாதனம் 6.4 இன்ச் HD+ (720×1600 பிக்சல்கள்) சூப்பர் AMOLED திரையை 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டிருக்கும்.
  • இது டெனிம் பிளாக் மற்றும் டெனிம் ப்ளூ கலர் வகைகளில் கிடைக்கும்.
  • சாம்சங் கேலக்ஸி F22 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பெறுகிறது, இதில் 48 MP முதன்மை சென்சார், 8 MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 MP மேக்ரோ கேமரா மற்றும் 2 MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இது 13MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.
  • சாம்சங் கேலக்ஸி F22 மீடியா டெக் ஹீலியோ G80 செயலியில் இருந்து ஆற்றல் பெறுகிறது ஈர்க்கிறது, இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான OneUI கோர் 3.1 உடன் boot செய்யப்படுகிறது மற்றும் 6000 mAh பேட்டரியை 15W வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடன் கொண்டுள்ளது.
  • இணைப்பிற்காக, கைபேசி வைஃபை, புளூடூத் 5.0, GPS, NFC, ஒரு ஹெட்போன் ஜேக் மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.
  • சாம்சங் கேலக்ஸி F22 4 ஜிபி / 64 ஜிபி மாடலுக்கு ரூ.12,499 விலையும், 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ.14,499 விலையும் கொண்டுள்ளது. இது ஜூலை 13 முதல் மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். முழுமையாக பணம் செலுத்தி பெறுபவர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

Views: - 167

0

0