விரைவில் ரகம் ரகமாக வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி 5 ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ!

30 January 2021, 2:03 pm
Samsung Galaxy F62, F12, A72, A52 5G Expected Soon
Quick Share

சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான கேலக்ஸி M02 பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் இப்போது இந்த ஒரு சாதனத்தை மட்டும் அறிமுகம் செய்யப்போவதில்லை. பிப்ரவரி மாத வெளியீட்டுக்காக சாம்சங் இன்னும் நான்கு சாதனங்களில் வேலை செய்து வருவதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

கேலக்ஸி F62, கேலக்ஸி F12, கேலக்ஸி A72 மற்றும் கேலக்ஸி A52 5ஜி ஸ்மார்ட்போன்களைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கங்கள் இப்போது நேரலையில் சென்றுவிட்டதால் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக போகின்ற என்பது உறுதியாகி உள்ளது.

வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி Fசீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

2020 டிசம்பரில், சாம்சங் கேலக்ஸி F12 இன் ஆதரவு பக்கம் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. சமீபத்தில், கேலக்ஸி M02 மற்றும் கேலக்ஸி F62 ஆகியவற்றின் ஆதரவு பக்கங்கள் நாட்டில் நேரலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து, கேலக்ஸி M02 இன் வெளியீட்டு தேதி தொடர்பான உறுதிப்படுத்தலும் வெளிவந்தது.

கேலக்ஸி F41 கடந்த ஆண்டு இந்தியாவில் பிளிப்கார்ட்டில் மட்டும் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த வரிசையில் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் இ-காமர்ஸ் போர்ட்டலுக்கும் பிரத்தியேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மறுபுறம், கேலக்ஸி F12 கேலக்ஸி M12 போனின் மறுபெயரிடப்பட்ட மாறுபாடாக இருக்கலாம் என்றும் இது அமேசான் இந்தியா வழியாக கிடைக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, SM-A725 F/ DS என்ற மாடல் எண்ணைக் கொண்ட கேலக்ஸி A72 4ஜி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபுறம், SM-A526B / DS மாதிரி எண்ணைக் கொண்ட சாம்சங் கேலக்ஸி A52 5G ஆதரவு பக்கம் ஆஸ்திரிய சாம்சங் தளத்தில் நேரலையில் உள்ளது. இது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி A32 போனுக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கம் நேரலையில் இருந்தது. எனவே இதுவும் விரைவில் வெளியாகக்கூடும் என்று எதிர்ப்ர்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 0

0

0