பட்ஜெட் விலையில ஒரு 6000 mAh பேட்டரி இருக்க சாம்சங் போன் வாங்கணுமா?! இது பெஸ்டா இருக்கும்!

21 July 2021, 3:32 pm
Samsung Galaxy M21 2021 with 6000mAh battery launched in India
Quick Share

ஒரு 13000 ரூபாய் பட்ஜெட்டில்  மிகப்பெரிய பேட்டரியுடன் ஒரு சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க உங்களுக்கு திட்டமிருந்தால் உங்களுக்கு ஒரு பரிந்துரையை இன்று நாங்கள் வழங்க உள்ளோம். 

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போனின் 2021 பதிப்பை இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் 6.4 இன்ச் sAMOLED டிஸ்ப்ளே, எக்ஸினோஸ் 9611 SoC, டிரிபிள் கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு 11 மற்றும் 6000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கைபேசியின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M21 2021 விலை & சலுகைகள்

64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 4 ஜிபி RAM கொண்ட இந்த போனின் விலை ரூ.12,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 6 ஜிபி RAM உடனும் கிடைக்கும். இது ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சார்கோல் கருப்பு வண்ணங்களில் வருகிறது. இந்த தொலைபேசி ஜூலை 26 முதல் அமேசானில் விற்பனைச் செய்யப்படும்.

புதிய பதிப்பின் வெளியீட்டு சலுகைகளை பொறுத்தவரை, HDFC வங்கி டெபிட் மற்றும் EMI பரிவர்த்தனைகள் உள்ளிட்ட கிரெடிட் கார்டுகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

அம்சங்கள்

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 6.4 அங்குல முழு HD+ இன்ஃபினிட்டி-U சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 2340 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. மேலும், டிஸ்பிளே 420 நிட்ஸ் பிரகாசம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

கேலக்ஸி M21 2021 மாலி G72MP3 GPU உடன் எக்ஸினோஸ் 9611 செயலியை கொண்டுள்ளது. இது அதிகபட்சம் 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. மைக்ரோ SD கார்டு வழியாக ஸ்டோரேஜை 512 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்க, தொலைபேசி மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 48 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் சென்சார் 123 டிகிரி FoV மற்றும் 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, சாதனம் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மென்பொருளைப் பொறுத்தவரை, கைபேசி ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன்UI 3.1 உடன் இயங்குகிறது. 15W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரியும் உள்ளது. கூடுதலாக, பாதுகாப்பிற்கென பின்புற கைரேகை ஸ்கேனரும் இதில் உள்ளது. தொலைபேசியில் முகம் அடையாளம் காணப்படும் அம்சமும் உள்ளது.

தொலைபேசியின் இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இரட்டை சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, GPS, A-GPS, Beidou, GLONASS ஆகியவற்றை தொலைபேசி ஆதரிக்கிறது. கூடுதலாக, தொலைபேசியில் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் போன்றவையும் உள்ளது.

Views: - 78

0

0

Leave a Reply