சாம்சங் கேலக்ஸி S21 சீரிஸ், கேலக்ஸி பட்ஸ் புரோ விற்பனை துவக்கம்! விலை எவ்ளோ தெரியுமா?
30 January 2021, 6:42 pmசாம்சங்கின் கேலக்ஸி S21 சீரிஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் புரோ ஆகியவை இப்போது இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கின்றன. புதிய சாம்சங் சாதனங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வாங்கலாம்.
- கேலக்ஸி S21 அடிப்படை மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் கூடிய மாடல் ரூ.69,999 விலையில் கிடைக்கும். இதன் 256 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.73,999 ஆகும்.
- கேலக்ஸி S21+ மாடலின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ.81,999 விலையையும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டிற்கு, 85,999 விலையையும் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.
- ஹை-எண்ட் கேலக்ஸி S21 அல்ட்ரா 12 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ1,05,999 விலையும் மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்டிற்கு ரூ.1,16,999 விலையும் நிர்ண்யம் செய்யப்பட்டு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கேலக்ஸி பட்ஸ் புரோவைப் பொறுத்தவரை, இதன் விலை ரூ.17,990 ஆகும்.
எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி S21 தொடரில் சாம்சங் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்குகிறது. கேலக்ஸி பட்ஸ் புரோவில், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 10% உடனடி கேஷ்பேக் பெறலாம். கேலக்ஸி S21 தொடரில் வாடிக்கையாளர்கள், ரூ.7,000 வரை தள்ளுபடி பெறக்கூடிய மேம்படுத்தல் திட்டத்தையும் தேர்வு செய்யலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் வயர்லெஸ் காதணிகள் சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர், பிரத்தியேக கடைகள், அமேசான் இந்தியா மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கின்றன. கேலக்ஸி S21 தொடர் பாண்டம் பிளாக், பாண்டம் சில்வர், பாண்டம் வயலட், பாண்டம் ஒயிட், பாண்டம் கிரே மற்றும் பாண்டம் பிங்க் ஆகிய ஆறு வண்ண விருப்பங்களில் வருகிறது. கேலக்ஸி பட்ஸ் புரோ கருப்பு, வயலட் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது.
மூன்று ஸ்மார்ட்போன்களும் சமீபத்திய எக்ஸினோஸ் 2100 சிப்செட் உடன் இயக்கப்படுகின்றன, மேலும் 5 ஜி ஆதரவுடன் வருகின்றன.
0
0