சாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா S பென் ஆதரவுடன் வருகை | முழு விவரம் இங்கே

14 November 2020, 2:04 pm
Samsung Galaxy S21 Ultra to come with S Pen support
Quick Share

சாம்சங் கேலக்ஸி S21 தான் கவனித்தை ஈர்க்கும் அடுத்த முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும், மேலும் ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் கசிவுகளில் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா S பென்னுடன் வரும் என்று மிகச் சமீபத்தியது தகவல் கசிவு தெரிவிக்கிறது. S பென் ஸ்டைலஸ் கேலக்ஸி நோட் உடன் வர துவங்கியதிலிருந்து இது ஒரு அடையாளமாக மாறிவிட்டது.

S21 அல்ட்ரா S பென் ஆதரவுடன் வரும் என்று 100% உறுதியாக ஐஸ் யூனிவெர்ஸ் தகவல் கசிவு தெரிவித்துள்ளது. மேலும் கேலக்ஸி நோட் தொடர் அடுத்த கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக இருக்கும் என்ற முந்தைய அறிக்கையுடன் இது ஒத்துப்போகிறது. உண்மையில் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

கேலக்ஸி S21 தொடரின் கசிந்த ரெண்டர்களும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ராவைப் போன்ற ஒரு வடிவமைப்பைக் காட்டுகின்றன. கேலக்ஸி S21 தொலைபேசிகளில் கூர்மையான விளிம்புகளைக் கொண்ட மிகப்பெரிய கேமரா பம்ப் மிகவும் வித்தியாசமானதாக தோன்றுகிறது. சாம்சங் இந்த முறையும் மூன்று புதிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதன்மைத் தொடரில் கேலக்ஸி S21, கேலக்ஸி S21 பிளஸ் மற்றும் கேலக்ஸி S21 அல்ட்ரா ஆகியவை இடம்பெறும்.

S பென் தவிர, கேலக்ஸி S21 அல்ட்ரா குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 அல்லது எக்ஸினோஸ் 2100 சிப்செட், 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான ஒன் UI 3.0 உடன் வெளியாகலாம்.

சாம்சங் கேலக்ஸி S21 தொடரை அதன் வழக்கமான அட்டவணையை விட ஒரு மாதம் முன்னதாக ஜனவரி மாதம் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக, கேலக்ஸி S21 தொலைபேசிகள் ஜனவரி 14, 2021 அன்று அறிமுகப்படுத்தக்கூடும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 29 ஆம் தேதிக்கு பின்னர் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Views: - 67

0

0