சாம்சங் டிவி பிளஸ்: இந்தியாவில் அறிமுகமானது புதிய சாம்சங் சேவை! இதனால் பயனர்களுக்கு பலன் என்ன?

31 March 2021, 3:10 pm
Samsung launches Samsung TV Plus service
Quick Share

சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிகளின் நுகர்வோருக்கு இலவச உள்ளடக்கத்தை வழங்க சாம்சங் டிவி பிளஸ் என்ற சேவையை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

விளம்பரங்களுடனான தேர்ந்தெடுக்கப்பட்ட நேரடி சேனல்கள் மற்றும் ஆன்-டிமேண்ட் வீடியோக்களுடன் இந்த சாம்சங் டிவி பிளஸ் சேவை இந்திய பயனர்களுக்குக் கிடைக்கும். 

இதற்கென, செட் டாப் பாக்ஸ் போன்ற கூடுதல் சாதனம் எதுவும் பயனர்களுக்குத் தேவையில்லை. சேவையை அணுக உங்களுக்கு தேவையானது 2017 அல்லது அதற்குப் பிறகு வெளியான சாம்சங் ஸ்மார்ட் டிவி மற்றும் செயலில் இருக்கும் இணைய இணைப்பு மட்டுந்தான்.

சாம்சங் டிவி பிளஸ் சேவை பெரும்பாலான சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் O OS அல்லது சமீபத்திய மென்பொருள் பதிப்பைக் கொண்ட டேப்லெட் சாதனங்களிலும் கிடைக்கும். கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கான சேவைகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சாம்சங் டிவி பிளஸ் பயன்பாட்டை சாம்சங் கேலக்ஸி ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் இரண்டிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

சாம்சங் டிவி பிளஸ் 2017 முதல் 2021 வரையிலான அனைத்து ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் உடனடியாக நேரலையில் இருக்கும், மேலும் பயனர்கள் 27 உலகளாவிய மற்றும் உள்ளூர் சேனல்களை அணுக முடியும். சேவையை மேலும் வலுவானதாக்க மேலும் பல உள்ளடக்க படைப்பாளர்களுடன் நிறுவனம் கூட்டணி அமைக்க திட்டங்களைக் கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானதை அடுத்த, சாம்சங் டிவி பிளஸ் இப்போது அமெரிக்கா, கனடா, கொரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட 14 நாடுகளில் கிடைக்கிறது.

உலகளவில், சாம்சங் டிவி பிளஸ் சாம்சங் ஸ்மார்ட் டிவி மற்றும் கேலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, செய்தி, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 800 க்கும் மேற்பட்ட சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது.

Views: - 23

0

0