சாம்சங்கின் புதிய நியோ QLED Q85A டிவி அறிமுகம் | விவரங்கள் இங்கே

17 April 2021, 3:20 pm
SAMSUNG NEO QLED Q85A SPECIFICATIONS AND FEATURES
Quick Share

சாம்சங் தனது நியோ QLED ரேஞ்ச் டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டி.வி.கள் 4K மற்றும் 8K ரெசல்யூஷன் விருப்பங்களில் கிடைக்கின்றன. இதன் திரை அளவுகள் 50 அங்குலங்கள் தொடங்கி 85 அங்குலங்கள் வரையிலானதாக உள்ளன. டி.வி.க்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்யவும் கிடைக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நியோ QLED டிவிகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி டேப் S7+, கேலக்ஸி டேப் S6 லைட் LTE ஆகியவற்றை ரூ.20,000 வரை கேஷ்பேக் மற்றும் 2021 ஏப்ரல் 15 முதல் 30 வரை ரூ.1,990 முதல் தொடங்கும் EMI சலுகைகளுடன் பெறலாம்.

சாம்சங் நியோ QLED Q85A விவரக்குறிப்புகள் 

  • சாம்சங் நியோ QLED Q85A ஒரு 4K QLED டிவி மற்றும் 65 மற்றும் 75 அங்குல திரை அளவுகளில் கிடைக்கிறது. 
  • 4K டிவியாக இருப்பதால் இது 3840 x 2160 ரெசல்யூஷன் கொண்டது. 
  • டிவி HDR 10, HSR 10+, HLG ஆகியவற்றை ஆதரிக்கிறது, 
  • ஆனால் டால்பி விஷன் திறனை ஆதரிக்கவில்லை. 
  • டிவியில் 2.W.2 ஒலி அமைப்பில் 60W ஒலி வெளியீடு உள்ளது. 
  • இந்த டிவி சாம்சங்கின் Taizen OS உடன் இயங்குகிறது மற்றும் உள்ளமைக்கப்பட்ட அனைத்து பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் வருகிறது. 
  • டிவி கூகிள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்சா போன்றவற்றுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. 
  • சாம்சங் Q90A, HDMI 2.1 அம்சத்துடன் ALLM ஆதரவை வழங்குகிறது. இது ஃப்ரீசின்க் பிரீமியம் புரோவுடன் 4K 120 Hz இல் கேமிங்கையும் ஆதரிக்கிறது. 
  • இணைப்பிற்காக, டிவியில் 4 HDMI போர்ட்கள், 3 USB போர்ட்கள், LAN போர்ட், ஆப்டிகல் போர்ட், ப்ளூடூத் 5.2 மற்றும் வைஃபை 5 உள்ளன.

சாம்சங் நியோ QLED Q85A விலை:

இந்த சாம்சங் நியோ QLED Q85A டிவிகளின் விலை குறித்து விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Views: - 189

0

0