பிரபல சீன நிறுவனத்துக்கு உபகரணங்கள் விற்பதை நிறுத்த சாம்சங் திட்டம் | சீனாவைத் திணறவிடும் அமெரிக்கா!
9 September 2020, 9:59 amசீன கைபேசி நிறுவனத்திற்கு அமெரிக்கா விதித்த தடைகளைத் தொடர்ந்து சாம்சங் மற்றும் எஸ்.கே.ஹைனிக்ஸ் நிறுவனங்களும் ஹவாய் நிறுவனங்களுக்கு உபகரணங்கள் விற்பனை செய்வதை நிறுத்தப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட உபகரணங்களை ஹவாய் நிறுவனத்திற்கு அமெரிக்காவை சாராத நிறுவனங்கள் விற்பனை செய்வதை கடந்த மாதம் அமெரிக்க அரசாங்கம் தடை செய்திருந்தது. இந்த தடை அறிவிப்பு சீன கைபேசி நிறுவனத்திற்கு ஒரு பேரிடியாக இருந்தது. இந்த தடை அறிவிப்பினால் இனிமேல் ஹவாய் நிறுவனம் உள்நாட்டில் கிரின் சிப்செட்களை உருவாக்க முடியாது.
ஹவாய் நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவின் தலைவரான ரிச்சர்ட் யூ, இந்த நடவடிக்கை “மிகப் பெரிய இழப்பு” என்று கூறியிருந்தார். நிறுவனத்தின் சொந்த பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இன்-ஹவுஸ் கிரின் சிப்களின் உற்பத்தி செப்டம்பர் 15 ஆம் தேதி நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏனெனில் அவை அமெரிக்க உற்பத்தி தொழில்நுட்பம் தேவைப்படும் ஒப்பந்தக்காரர்களால் தயாரிக்கப்படுகின்றன என்று நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவின் தலைவர் ரிச்சர்ட் யூ கூறினார்.
தொடர்ச்சியான கட்டுப்பாடு உத்தரவுகளால், ஹவாய் இப்போது மிகக் குறைவான ஆதார விருப்பங்களையே கொண்டுள்ளது. மே மாதத்தில், தைவானை தளமாகக் கொண்ட TSMC ஹவாய் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை நிறுத்தியது.
இதற்கிடையில், சீனா, உள்நாட்டு சிப் நிறுவனமான SMIC யை ஹவாய் நிறுவனத்திற்கு மாற்று சப்ளையராக கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தி வெர்ஜ் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், அமெரிக்க நிர்வாகம் தடுப்புப்பட்டியலில் ஹவாய் நிறுவனத்தைச் சேர்க்க பரிசீலித்து வருவதால், இந்த நடவடிக்கை எல்லாம் ஹவாய் நிறுவனத்திற்கு உதவ வாய்ப்பில்லை.
இவ்வளவு சிக்கல்கள் நடந்துக்கொண்டிருக்கையில், இப்போது சாம்சங் மற்றும் SK ஹைனிக்ஸ் நிறுவனங்களும் ஹவாய் உடனான விற்பனையை தடை செய்தால் ஹவாய் நிறுவனத்தின் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்.
0
0