விரைவில் மடிக்கக்கூடிய டேப்லெட் | அசத்தலான திட்டத்துடன் சாம்சங்!

26 April 2021, 3:35 pm
The report says that the company is expected to launch the new tri-folding tablet in the first quarter of 2022.
Quick Share

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ஃபோல்டு 2 மற்றும் கேலக்ஸி Z பிளிப் ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. நிறுவனம் இந்த வருடமும் மூன்று புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது, ​​ஒரு புதிய அறிக்கை நிறுவனம் விரைவில் மூன்றாக மடிக்கக்கூடிய டேப்லெட் சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Let Go Digital அறிக்கையின்படி, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஐரோப்பிய யூனியன் அறிவுசார் உடமை அலுவலகத்தில் (EUIPO) ஒரு வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது, இது நிறுவனத்தின் Z-ஃபோல்டு வரிசையின் கீழ் மடிக்கக்கூடிய டேப்லெட் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான நிறுவனத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. நிறுவனத்தின் புதிய சாதனம் ‘சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு டேப்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிய ட்ரை-ஃபோல்டு டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் என்றும், இந்த சாதனத்தை S-பென் ஸ்டைலஸிற்கான ஆதரவுடன் அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது. சாதனத்தின் டிஸ்பிளே புதிய வகை அல்ட்ரா-மெல்லிய-கண்ணாடி (UTG) மூலம் தயாரிக்கப்படுகிறது, இது S – pen பயன்பாட்டை மேம்படுத்தக்கூடும். 

மேற்சொன்ன தகவல்களை தவிர, சாம்சங்கின் வரவிருக்கும் மடிக்கக்கூடிய டேப்லெட் பற்றிய விவரங்கள் தற்போது குறைவாகவே உள்ளன. இது குறித்த கூடுதல் அப்டேட்டுகளுக்கு updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 113

0

0

Leave a Reply