ஆப்பிள் நிறுவனத்தை பங்கமாக கலாய்த்த சாம்சங்! இது தான் காரணமா?

Author: Dhivagar
16 October 2020, 2:53 pm
Samsung, Xiaomi, and OnePlus make fun of Apple
Quick Share

இந்த வார தொடக்கத்தில், ஆப்பிள் தனது புதிய முதன்மை ஸ்மார்ட்போன்களான ஐபோன் 12 தொடரை அறிமுகப்படுத்தியது. அப்போது நிறுவனம் தனது தொலைபேசிகளுடன் பவர் அடாப்டர் அல்லது வயர்டு இயர்போன்களை இனிமேல் வழங்காது என்ற புதிய கொள்கையையும் அறிவித்தது. சாம்சங் உட்பட மற்ற சில பிரபலமான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆப்பிளின் இந்த முடிவை கேலி செய்து வருகிறார்கள்.

ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, சாம்சங் கரீபியன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சாம்சங் பவர் அடாப்டரின் படத்தை வெளியிட்டது. அத்துடன், “உங்கள் கேலக்ஸி போன்களுடன் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் சாம்சங் தருகிறது. மிகவும் அடிப்படையான சார்ஜர் முதல் சிறந்த கேமரா, பேட்டரி, செயல்திறன், நினைவகம் மற்றும் ஒரு ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் திரை வரை அனைத்தையும் தருவதாக ஆப்பிளை நிறுவனத்தை மறைமுகமாக நக்கலடிக்கும் விதமாக வலைப்பதிவு இடுகையையும் பதிவிட்டிருந்தது.

சாம்சங் மட்டுமல்லாது கடந்த புதன்கிழமை சியோமி நிறுவனமும் இதேபோன்று ஆப்பிளைக் கலாய்த்தது. ஒரு ட்விட்டர் பதிவில், நிறுவனம் “Mi 10T புரோவுடன் எதையும் வழங்குவதை நிறுத்தவில்லை” என்று பதிவிட்டுள்ளது.

புதன்கிழமை தனது ஒன்பிளஸ் 8T ஃபிளாக்ஷிப்பை அறிமுகப்படுத்திய ஒன்பிளஸ், புதிய தொலைபேசியுடன் 65 சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி ஆப்பிள் நிறுவனத்தைக்  குத்திக்காட்டியுள்ளது.

சுற்றுச்சூழல் காரணங்களுக்காக இந்த உபகரணங்கள்  அகற்றப்பட்டதாக சாம்சங் நிறுவனம் சப்பக்கட்டு காட்டினாலும், உண்மை என்னவென்றால், ஆப்பிள் நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்கவே பவர் அடாப்டர் அல்லது இயர்பட்ஸ் போன்ற உபகரணங்களை நிறுவனம் வழங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Views: - 54

0

0