SBI பயனரா நீங்கள்? உஷாரா இருந்துக்கோங்க..! மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

29 September 2020, 11:33 am
SBI warns its users regarding WhatsApp Scam
Quick Share

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்கள் பெறும் மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து ஒரு ட்வீட் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் வழியாக வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மோசடி செய்யும் குற்றவாளிகள், முதலில் அந்த நபர் எஸ்பிஐ வழங்கிய லாட்டரியை வென்றதாகக் கூறி, பின்னர் அவர்கள் ஒரு மொபைல் எண்ணைக் கொடுத்து அதற்கு அழைக்குமாறு பயனரைக் கேட்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு மோசடி வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.

எஸ்பிஐ இது குறித்து அறிவித்து, வங்கி அதுபோன்ற சலுகைகள் அல்லது லாட்டரிகள் எதுவும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற மோசடி பொறிகளில் மக்கள் விழாதபடி இருக்குமாறு எஸ்பிஐ தனது பயனர்களைக் கோரியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், லாட்டரி மற்றும் பொருட்கள் தொடர்பாக மக்கள் பெறும் ஃபிஷிங் மின்னஞ்சல்களை குறித்து எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது. வங்கியைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட விவரங்கள், கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் மற்றும் எந்தவிதமான OTP களையும் ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்றும் எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

இத்தகைய மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிகள் பின்வருமாறு:

  • ஒருவர் தங்கள் வங்கி விவரங்கள், PIN குறியீடுகள் அல்லது கடவுச்சொற்களை ஒருபோதும் பகிரக்கூடாது. உங்கள் அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள் அல்லது ஏதேனும் முக்கியமான ஆவணங்கள் அல்லது படிவங்களின் புகைப்படங்களையும் நீங்கள் பகிரக்கூடாது.
  • அறியப்படாத எண்ணிலிருந்து இணைப்புகள், படங்கள், GIFs அல்லது எந்த வகையான மீடியாவையும் கிளிக் செய்வதை நீங்கள் எப்போதும் தவிர்க்க வேண்டும்.
  • யாராவது உங்களிடம் ஏதேனும் தனிப்பட்ட தகவல்களைக் கேட்டால் அல்லது லட்சக்கணக்கில் லாட்டரி விழுந்துள்ளது என்று சொன்னால் அதையெல்லாம் நம்பக்கூடாது. ஏனெனில் வங்கியில் உள்ள ஊழியர்கள் உங்களிடம் ஒருபோதும் OTP களையோ அல்லது அத்தகைய தனிப்பட்ட தகவல்களையோ கேட்க மாட்டார்கள்.
  • ஒரு பொது வைஃபை பயன்படுத்தி உங்கள் நெட்பேங்கிங் கணக்கில் ஒருபோதும் உள்நுழைய வேண்டாம், ஏனெனில் அந்த நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பது உங்களுக்குத் தெரியாது, மேலும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கரின் கைகளுக்குச்  சென்றால் உங்கள் பணம் பறிபோகக்கூடும்.

Views: - 6

0

0