குறைந்த விலைக்கு ஐபோன் தருவதாக சொல்லி ஏமாற்றும் மோசடி கும்பல் | எச்சரிக்கும் காவல் துறை

21 July 2021, 5:32 pm
scammers found a new way to loot money warns cyberpolice
Quick Share

மக்களின் வசதிக்கு ஏற்ப தொழில்நுட்பம் வளர வளர அதை வைத்து மோசடி செய்யும் கும்பலும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் பல மோசடி அனுபவங்களைப் பற்றி நாம் செய்திகளிலும் ஊடகங்களிலும் கேட்டறிந்தாலும், மோசடி செய்பவர்கள் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்துவிடுகிறோம். அப்படி இப்போது மோசடி செய்பவர்கள் செய்யும் ஏமாற்று வேலை தான் இந்த ஐபோன் மோசடி.

iPhone, சாம்சங்கின் ஃபோல்டபில் போன் போன்றவை எல்லாம் குறைந்தது ரூ.70000 க்கு மேல் தான் வாங்க கிடைக்கின்றன. அதற்கேற்றவாறு, கேமரா, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், என நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்த நிறுவனங்களே அவ்வப்போது ஆபர்களுடன் தங்கள் சாதனங்களை வழங்கி வருகின்றன. ஆனால், இந்த போன்களை பற்றி எல்லாம் விவரம் அறியாதோர் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை எல்லாம் மிகவும்  குறைந்த விலைக்கு தருவதாக சொன்னவுடன் அதற்கு மயங்கி ஏமாந்து விடுகின்றனர். அதெப்படி போன் வாங்கிக்கொண்டு தானே பணம் கொடுப்போம் எப்படி ஏமாறுவோம் என்று கேட்கிறீர்களா? 

சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளை பெற customs duty செலுத்த வேண்டும் என்று சொல்கின்றனர். இது எல்லாமே அவர்களின் ஒரு செட்அப் மட்டுமே தவிர எதுவுமே உண்மை கிடையாது. பணத்தை பெற்ற பின் நீங்கள் போன் போட்டால் கூட எடுக்காமல் சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள். இத்தகைய மோசடி கும்பல்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழ்நாடு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

எனவே, குறைந்த விலைக்கு யாரேனும் போன் தருவதாக சொன்னால் நேரே சென்று போனை சோதித்துப் பார்த்து அதன் பிறகே பணம் கொடுத்து வாங்க வேண்டும். அவசரப்பட்டு ஆசைப்பட்டு ஏமாந்துவிடக்கூடாது.

Views: - 82

0

0

Leave a Reply