அருமையிலும் அருமை! கண் தெரியாதவர்களின் கவலையைப் போக்க அற்புத கண்டுபிடிப்பு!

10 May 2021, 3:48 pm
Shoes Can Help Blind People
Quick Share

கண்களில் குறைபாடுள்ள மாற்றுதினாளிகளுக்கு நம்மால் சொல்ல இயலாத பல இன்னல்கள் இருக்கும். ஆனால், அவர்களின் பாதையில் இருக்கும் தடைகளைக் கண்டறிய ஒரு புதிய நுட்பத்துடன் கூடிய ஒரு காலணி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கணினி விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான ஷூ ஒன்றை உருவாக்கி உள்ளனர், இது பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள மாற்றுதிறனாளிகளுக்கு தங்கள் வழியில் வரும் தடைகளை கண்டறிந்து பாதுகாப்பாக இருக்க உதவியாக இருக்கிறது.

Shoes Can Help Blind People

டெக்-இன்னோவேஷன் எனும் பெயர் கொண்ட ஒரு ஆஸ்திரிய நிறுவனம் தான் கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்த அற்புதமான தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இன்னோமேக் (InnoMake) எனும் பெயர் கொண்ட இந்த தயாரிப்பு ஷூவின் நுனியில் ஒரு ஜோடி மீயொலி சென்சார்கள் (Ultrasonic Sensor) உடன் உள்ளது. பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் ஏதேனும் தடையின் அருகில் சென்றால் 4 மீட்டர்களுக்கு முன்னதாகவே இந்த சென்சார்கள் மூலம் அதை காண்காணித்து  தயாரிப்பு தானாகவே அதிர்வுறும் மற்றும் சத்தமிட்டு எச்சரிக்கும்.

இரண்டு தகவல்களைக் கண்டறியும் வகையில் இந்த தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது – ஒன்று தடை என்ன என்பதை கண்டுபிடிக்கும் மற்றும் அடுத்து தடையுள்ள திசையை கண்டறியும். குறிப்பாக கீழ்நோக்கி படிகளில் இறங்கும்போது அல்லது துளைகள் இருக்கும் பகுதிகளில் செல்லும்போது இது சிறப்பாக செயல்படும்.

Shoes Can Help Blind People

இந்த சாதனம் ஏற்கனவே பயன்பாட்டுக்கான ஒப்புதல் பெற்றுள்ளது. ஆனால் இதன் விலை தான் மிகவும் அதிகமாக உள்ளது. நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி £2,700 விலைக்கு விற்கப்படுகிறது, இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.270,000 ஆகும். இதில் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் இரண்டு சென்சார்கள் இருக்கும் மற்றும் ஒரு யூ.எஸ்.பி சார்ஜர் இருக்கும்.

இருப்பினும் இது சாதனத்தின் இறுதி வடிவம் அல்ல, இப்போது ஆராய்ச்சியாளர்கள் AI நுட்பத்துடன் மிகவும் துல்லியமான தடையைக் கண்டறியும் கேமராவுடன் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 184

1

0