சைடு கேப்பில் வாட்ஸ்அப்பைக் கலாய்த்த சிக்னல்!

Author: Dhivagar
21 March 2021, 8:15 am
Signal jokes about WhatsApp's "downtime", reports spike in user registrations
Quick Share

கடந்த  வெள்ளிக்கிழமை இரவில் பேஸ்புக் பயன்பாடுகளான வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றவை செயலிழந்தன. இதனால், பயனர்கள் பலரும் அவதிக்கு உள்ளாகினர். அதுவும் வார இறுதிக்கு பிளான் போட்டு அவுட்டிங் செல்லும் பலரும் இன்ஸ்டா, வாட்ஸ்அப்  போன்றவற்றில் தான் பேசிக்கொள்வாரகள். சரியாக நேரம் பார்த்து இந்த பயன்பாடுகள் காலை வாரியதை அடுத்து இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும், அப்படியே வாட்ஸ்அப்பைக் கலாய்த்தும் உள்ளது சிக்னல் நிறுவனம். 

இந்த வாட்ஸ்அப் நெட்வொர்க்  செயலிழப்பு  குறிப்பு ஒரு ட்விட்டர் பதிவொன்றை சிக்னல்  நிறுவனம் பதிவிட்டு இருந்தது. அதில் வாரஇறுதியில் வாட்ஸ்அப் செயலிழந்துள்ளதால் உங்களுக்கு உதவ சிக்னல் இருக்கிறது என்பது போல் வாட்ஸ்அப் பயன்பாட்டை கலாய்த்து பதிவிட்டிருந்தது.

வாட்ஸ்அப் செயலிழப்பு கொஞ்ச நேரத்துலே சரியாகிவிட்டாலும், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாக்ராமைக் கலாய்த்து பல மீமஸ்கள் இரவு முழுவதும், ஏன் விடிந்தும் கூட பதிவிடப்பட்டுக்கொண்டே இருந்தது. 

இந்த நெட்வொர்க் செயலிழப்புக்குக் காரணம் தான் என்ன என்பதையும் வாட்ஸ்அப் விளக்கவில்லை.  ஏற்கனவே பிப்ரவரி மாதத்திலும், இது போன்ற ஒரு செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. மேலும், வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தி வருவதாலும், மக்கள் பலரும் சிக்னல், டெலிகிராம் என மக்கள் மாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த செயலிழப்பு கூடுதல் வாட்ஸ்அப்பிற்கு கூடுதல் தரம் குறைவாக பார்க்கப்படுகிறது.

Views: - 142

0

0