அரசாங்கத்தின் முடிவால் விலை உயரப்போகும் ஸ்மார்ட்போன்கள்..காரணம் இதுதான்…! செம ஷாக்கில் மக்கள்

Author: Dhivagar
3 October 2020, 12:52 pm
Smartphones to get costly 10 percent increase in Duty
Quick Share

ஏற்கனவே GST உயர்வு, COVID-19 போன்றவற்றால் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இப்போது அது போதாதென்று, இந்திய அரசு, டிஸ்ப்ளே பேனல்களில் 10% வரி உயர்வை அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வு எல்லாம் இறுதியாக போன் வாங்கும் நுகர்வோரின் தலையில் தான் வந்து விடியும் என்பதில் எந்த வித சந்தேகங்களும் இல்லை.

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான OPPO, Vivo, Xiaomi, Samsung, Realme போன்றவற்றில் இருந்து போன்களை வாங்க எண்ணும் அனைவரையும் இந்த வரி உயர்வு பாதிக்கும். இந்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் அதாவது சுயசார்பு பாரதம் எனும் முயற்சியின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் செஸ் காரணமாக உண்மையான வரி உயர்வு 11% ஆகும்.

இந்த வரி உயர்வு காரணமாக 1.55 முதல் 5% வரை விலையுயர்வு இருக்கக்கூடும் என்று நிறுவனங்கள் கூறியுள்ளன. அதே நேரத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த வரி உயர்வு காரணமாக தேவை பாதிக்கப்படும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. வரிகளை உயர்த்துவதற்கும், மொபைல் போன்களுக்கான ஓவ்வொரு கட்டமான உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும் இது சரியான நேரம் ஆக இருக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே பேனலின் தரத்தைப் பொறுத்து விலையில் 15-25% வரை கூடுதலாக செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி உயர்வு ஸ்மார்ட்போன் விலை,  விற்பனையை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், எடுத்துக்காட்டாக 10% விலை அதிகரிப்பு இருக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள்; அப்போது ரூ.25,000 மதிப்புள்ள போனை நீங்கள் ரூ.27,000 கொடுத்து பெற வேண்டியிருக்கலாம்.

இந்த கொள்கை ஏப்ரல் மாதத்திலேயே ஸ்மார்ட்போன்களைப் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் குடியேறவும் டிஸ்பிளேகளுக்கான உற்பத்தியைத் தொடங்கவும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் அதிக நேரம் வழங்கியிருந்தது. தற்போது, ​​இந்தியாவில் டிஸ்ப்ளே தயாரிக்கும் நான்கு நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு டி.சி.எல் மற்றும் ஹோலிடெக்.

சில உற்பத்தியாளர்கள் இந்த தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதத்தை ஈடுசெய்ய முயற்சிக்கும்போது விலைகள் உடனடியாக உயர வாய்ப்புள்ளது. அதோடு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பெற அரசாங்கம் முயற்சிப்பதுவும் வரி உயர்வுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என்றும் ஊகிக்கப்படுகிறது.

Views: - 71

0

0