6.22 இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் விவோ Y1s விரைவில் இந்தியாவில்! முக்கிய விவரங்கள் இங்கே

24 November 2020, 9:06 pm
Vivo Y1s to launch in India soon with 6.22-inch HD+ display, MediaTek Helio P35 SoC
Quick Share

விவோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை Y-தொடரில் விவோ Y1s என்ற பெயரில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. நினைவுகூர, இந்த தொலைபேசி சமீபத்தில் கம்போடியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விவோ Y1s விலை

விவோ Y1s ஒரே 2 ஜிபி + 32 ஜிபி பதிப்பிற்கு விலை $109 ஆகும் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.8,166 விலையைக் கொண்டிருக்கும். இது அரோரா ப்ளூ மற்றும் ஆலிவ் பிளாக் கலர் விருப்பங்களில் வரும். இந்தியாவில், தொலைபேசியின் விலை சுமார் ரூ.8,000 ஆக இருக்கும்.

விவோ Y1s விவரக்குறிப்புகள்

விவோ Y1s 6.22 இன்ச் HD+ IPS LCD பேனலைக் கொண்டிருக்கும், மேலே ஒரு டியூட்ராப் நாட்ச் மற்றும் 720 x 1520 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 271 ppi உடன் இருக்கும். இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மீடியா டெக் ஹீலியோ P35 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD கார்டு வழியாக ஸ்டோரேஜை மேலும் விரிவாக்க முடியும்.

இந்த தொலைபேசியில் 13 மெகாபிக்சல் உடன் ஒற்றை பின்புற கேமரா மற்றும் LED ப்ளாஷ் கொண்டுள்ளது. அத்துடன், 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது, இதில் எஃப் / 1.8 துளையில் பொருத்தப்பட்டுள்ளது.

விவோ Y1s 4,030 mAh பேட்டரி உடன் பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான ஃபன்டச் OS 10.5 இல் இயங்குகிறது. இது கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கவில்லை.

இணைப்பு விருப்பங்களில் இரட்டை 4ஜி VoLTE, 2.4 GHz வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். கைபேசி 135.11 x 75.09 x 8.28 மிமீ அளவுகளையும் மற்றும் 161 கிராம் எடையையும் கொண்டிருக்கும்.

Views: - 0

0

0