சோனி பிளேஸ்டேஷன் 5 முன்பதிவுகள் இந்தியாவில் ஆரம்பிச்சாச்சு!
12 January 2021, 4:17 pmசோனியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளேஸ்டேஷன் 5 இறுதியாக இந்தியாவில் முன்பதிவுச் செய்ய இன்று முதல் கிடைக்கும். சோனியின் சமீபத்திய கேமிங் கன்சோல் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இன்று முதல், இதை பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இருந்து ஆர்டர் செய்யலாம்.
பிஎஸ் 5 க்கான முன்பதிவுகள் இன்று பிற்பகல் 12 மணி முதல் நேரலையில் உள்ளன. அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், கேம்ஸ் தி ஷாப், ஷாப் அட் சோனி சென்டர், விஜய் சேல்ஸ் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து இதை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். சோனி பல சந்தைகளில் பிஎஸ் 5 க்கான வரையறுக்கப்பட்ட ஸ்டாக்குகளையே கொண்டுள்ளது, எனவே பிஎஸ் 5 ஐ உங்கள் கைகளில் பெற விரும்பினால், அதை விரைவில் முன்கூட்டியே ஆர்டர் செய்வது நல்லது.
பிளேஸ்டேஷன் 5 நிலையான பதிப்பிற்கு, ரூ.49,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ் 5 இன் டிஜிட்டல் பதிப்பு ரூ.39,990 விலைக்கொண்டுள்ளது. ஆனால் ஒரு IGN அறிக்கையின்படி, இது துவக்கத்தின் போது கிடைக்காது.
டூயல் சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன், எச்டி கேமரா மற்றும் பல்ஸ் 3D வயர்லெஸ் ஹெட்செட் போன்றவையும் அறிமுகமாகும் போது விற்பனைக்கு வராது என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. டூயல்சென்ஸ் வயர்லெஸ் கன்ட்ரோலர் மற்றும் மீடியா ரிமோட் உள்ளிட்ட பிற பாகங்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்ய கிடைக்கும். டூயல்சென்ஸ் வயர்லெஸ் கன்ட்ரோலரின் விலை ரூ.5,990, மற்றும் மீடியா ரிமோட் விலை ரூ.2,590 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.