சீக்கிரமே ட்ரோன்கள் மூலம் அமேசான் டெலிவரியை பெற நேரம் வந்து விட்டது!!!

1 September 2020, 11:31 pm
Quick Share

அமேசான் டெலிவரியை  வானத்திலிருந்து பெறுவது ஒரு யதார்த்தமாக மாறுவது தற்போது நினைவாக போகிறது. பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் திங்களன்று ட்ரோன்கள் மூலம் தொகுப்புகளை வழங்க அமேசான் நிறுவனத்திற்கு  ஒப்புதல் அளித்ததாகக் கூறியது. இந்த ஒப்புதல் ஒரு முக்கியமான படியாகும் என்று அமேசான் கூறியது.  ஆனால் அது இன்னும் ட்ரோன்களை பரிசோதித்து வருகிறது. ட்ரோன்கள் மூலம் எப்போது வாடிக்கையாளர்கள்  டெலிவரியை பெறுவார்கள்  என்பது பற்றி எதுவும் கூறவில்லை.

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான்  ட்ரோன் விநியோகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இது ஒழுங்குமுறை தடைகளால் மந்தமானது. டிசம்பர் 2013 இல், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ட்ரோன்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பறக்கும் என்று கூறினார்.

கடந்த ஆண்டு, அமேசான் முழு மின்சாரம் கொண்ட, 5 பவுண்டுகள் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய சுய-பைலட்டிங் ட்ரோன்களை வெளியிட்டது. மேலும் 30 நிமிடங்களில் பொருட்களை வீட்டின் பின்புறத்தில் இறக்கி வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், ஒரு அமேசான் நிர்வாகி வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் விநியோகம் ஒரு சில மாதங்களுக்குள் நடக்கும் என்று கூறினார். ஆனால் அவர் இதனை கூறிய  பின்னர் 14 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.

சியாட்டலை தளமாகக் கொண்ட அமேசான் ட்ரோன் விநியோக சேவைக்கு அங்கீகாரம் பெற்ற மூன்றாவது நிறுவனம் என்று FAA தெரிவித்துள்ளது. டெலிவரி நிறுவனமான ஐ.பி.எஸ் மற்றும் தேடல் நிறுவனமான கூகிளுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் கடந்த ஆண்டு இந்த ஒப்புதலை பெற்றது.

Views: - 0

0

0