கூகிளின் “Three Two Model” குறித்து விவரிக்கும் சுந்தர் பிச்சை!!!

Author: Hemalatha Ramkumar
21 October 2021, 6:19 pm
Quick Share

கொரோனா காரணமாக பலர் தங்களது வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு ஆகி விட்டது. ஆனால் அலுவலகத்திற்குத் திரும்புவது தவிர்க்க முடியாதது. இப்போது, ​​கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அலுவலகத்தில் வேலை மற்றும் தொலைதூர வேலைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது ஏன் முக்கியம் என்பதை விளக்கியுள்ளார்.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைவர் பிச்சை, அலுவலகத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் மற்றும் வீட்டில் இருந்து இரண்டு நாட்கள் வேலை செய்வது ஊழியர்களுக்கும் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையே “சமநிலையை” அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

கூகிள் ஒரு “Three Two Model” யை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்களுக்கு, கூகுள் ஊழியர்களுக்கு எங்கிருந்து வேலை செய்வது என்பதை முடிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த Three Two Model யின் பின்னணி என்ன?
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின்படி ஒரு ஊழியர் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வேலை செய்யும் போது தங்கள் சக ஊழியர்களுடன் ஒத்துழைக்க வாய்ப்பளிப்பார் என்று நம்புகிறார். அதே நேரத்தில் இரண்டு நாட்கள் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு செல்லும் தங்கள் பயணத்தை நிறுத்தி வைக்க இது உதவுகிறது.

கூகிளுக்கு Three Two Model நிரந்தரமானதா?
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடனான உரையாடலில், தான் அப்படி தான் நினைப்பதாக சுந்தர் பிச்சை கூறினார். நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் உள்ள ஊழியர்கள் பொதுவாக அலுவலகத்திற்கு செல்ல நீண்ட பயணத்தை எதிர்கொள்கிறார்கள்.

தற்போது, ​​கூகிள் தனது பணியிடங்களை “மறுவடிவமைக்கிறது”.
ஜனவரி 2022 க்கு முன் கூகுள் தனது அனைத்து ஊழியர்களையும் வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி கூறியுள்ளது.

இதுவரை, 20-30 சதவிகித கூகுள் ஊழியர்கள் தானாக முன்வந்து அலுவலக இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். வீட்டில் இருந்து நிரந்தரமாக வேலை செய்யும் கூகுள் தொழிலாளர்கள் 25 சதவிகிதம் வரை ஊதியக் குறைப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னர் தெரியவந்தது.

Views: - 392

0

0