மிகவும் மலிவான விலையில் Tata Ace Gold Petrol CX அறிமுகம் | விலையுடன் விவரங்கள் இங்கே

Author: Dhivagar
29 July 2021, 4:22 pm
Tata Ace Gold Petrol CX Launched
Quick Share

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ஏஸ் கோல்ட் பெட்ரோல் CX என்ற சிறிய வணிக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.99 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏஸ் கோல்ட் பெட்ரோல் CX இந்தியாவின் மிகவும் மலிவான நான்கு சக்கர சிறு வணிக வாகனம் (SCV) ஆகும் மற்றும் இது இரண்டு வகைகளில் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாறுபாடுகள் & விலை நிர்ணயம்

Flatbed: ரூ.3.99 லட்சம்

Half-deck body: ரூ.4.10 லட்சம்

குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் எக்ஸ்-ஷோரூம் (புனே) விலைகள் என்பதை நினைவில் கொள்க. புதிய ஏஸ் கோல்ட் பெட்ரோல் CX மாடலுக்கான முன்பதிவு தற்போது இந்தியா முழுவதும் பெறப்பட்டு வருகிறது, இது எதிர்வரும் நாட்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைனான்ஸ் திட்டம்

புதிய SCV-க்கு எளிதான நிதித் திட்டங்களையும் வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து ஏஸ் கோல்ட் பெட்ரோல் CX வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த EMI ஆக மாதம் ரூ.7,500 தவணைத் தொகையில் 90% வரை பைனான்ஸ் வழங்குகிறது.

இன்ஜின் மற்றும் பிற அம்சங்கள் 

ஏஸ் கோல்டு பெட்ரோல் CX மாறுபாடு இரண்டு சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படும் நான்கு சக்கர SCV ஆகும். இந்த இன்ஜின் நான்கு வேக கியர்பாக்ஸுடன் இணையாகஉள்ளது.

அதிகபட்ச சக்தி: 29bhp @ 4,000rpm

உச்ச முறுக்கு: 55Nm @ 3,000rpm

இந்த சிறிய ரக வணிக வாகனம் 1.5 டன்களுக்கு மேல் எடை தாங்கும் திறன் கொண்டது மற்றும் இது ஒரு பிளாட்பெட் அல்லது ஹை-டெக் பாடி கட்டமைப்புடன் கிடைக்கிறது. சரக்கு வைக்கும் பகுதி பிளாட்-பெட் மாடலில் 2,200 மிமீ நீளமும், 1,490 மிமீ அகலமும் மற்றும் 300 மிமீ உயரத்தையும் கொண்டுள்ளது.

விற்பனைக்குப் பின் சேவை

டாடா மோட்டார்ஸ் சம்பூர்ணா சேவா 2.0 என்பதன் கீழ் விற்பனைக்கு பிந்தைய சேவையையும் வழங்குகிறது. இதில் பல்வேறு வாகன பராமரிப்பு மற்றும் சேவை உறுதி திட்டங்கள், வருடாந்திர பராமரிப்பு தொகுப்புகள் மற்றும் மறுவிற்பனை வாய்ப்புகளும் கிடைக்கின்றன. கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு 24 × 7 சாலையோர உதவி, டாடா அலர்ட், டாடா ஜிப்பி மற்றும் டாடா கவாச் திட்டத்துடன் 15 நாள் விபத்து பழுது உத்தரவாதமும் கிடைக்கிறது.

Views: - 573

0

0