ரூ.20.20 லட்சம் மதிப்பில் புதிய டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா அறிமுகம் | அம்சங்கள் & விவரங்கள் இதோ

23 February 2021, 12:59 pm
Tata Safari Adventure Persona price announced . What makes it special
Quick Share

டாடா மோட்டார்ஸ் திங்களன்று முற்றிலும் புதிய சஃபாரி கார்களை  அறிமுகம் செய்துள்ளது, இது அடிப்படை XE மேனுவல் டிரிமுக்கு ரூ.14.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கி மிக உயர்ந்த மாடலான XZ + தானியங்கி மாறுபாடுக்கு ரூ.21.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விலைகளைக் கொண்டுள்ளது. 

அதோடு, உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனம் சஃபாரி காரின் ‘அட்வென்ச்சர் பெர்சோனா’ பதிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது டாப்-ஸ்பெக் XZ+ டிரிம் அடிப்படையில் வருகிறது, மேலும் மேனுவல் மாடல் ரூ.20.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.21.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலைக் கொண்டுள்ளது. வழக்கமான சஃபாரிகளிலிருந்து சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இப்போது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

வெளிப்புறத்தில், இது ஒரு தனித்துவமான வெளிப்புற வண்ண தீம் மற்றும் பிளாக்டு-அவுட் அலாய் வீல்களைப் பெறுகிறது. அட்வென்ச்சர் பெர்சோனா வேரியண்டின் வெளிப்புற உடலமைப்பில் சில கருப்பு நிற அமைப்புகளும் உள்ளன, இது காருக்கு சில முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது. முன் மெயின் கிரில், ரூஃப் ரெயில் இன்சர்ட்ஸ், வெளிப்புற கதவின் கைப்பிடி ஹெட்லேம்ப் இன்சர்ட்ஸ், பம்பர்கள் மற்றும் அலாய்ஸ் போன்ற கூறுகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் உள்ளன. இது பொன்னட்டில் ஒரு சஃபாரி மாஸ்கட்டையும் கொண்டுள்ளது.

‘அட்வென்ச்சர் பெர்சோனா’ அடையாளமான பழுப்பு நிற உட்புறங்கள், ஏர் வென்ட்கள், குமிழ், சுவிட்சுகள், உள் கதவு கைப்பிடி மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஸ்டீயரிங், கிராப் ஹேண்டில்கள், ஃப்ளோர் கன்சோல் ஃபிரேம், மற்றும் IP மிட் பேட் ஃபினிஷர் ஆகியவற்றில் அடர்நிற குரோம் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் உள்ளமைவுகளிலும் கிடைக்கிறது, மேலும் XZ+ மாடலுக்கான அதே உபகரணங்கள் மற்றும் அம்சங்களைப் பெறுகிறது. 

டாடா சஃபாரி பெர்சோனா அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 170 PS அதிகபட்ச ஆற்றலையும் 350 PS பீக் டார்க்கையும் வழங்குவதற்காக டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆறு வேக மேனுவல் மற்றும் விருப்பமான ஆறு வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0

Leave a Reply