ஸ்னாப்டிராகன் 690 செயலியுடன் TCL FFALCON Thunderbird FF1 அறிமுகம் | முழு விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
30 August 2021, 11:30 am
TCL launches FFALCON Thunderbird FF1 with a Snapdragon 690 processor
Quick Share

சீன தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎல் தனது சொந்த நாட்டில் FFALCON தண்டர்பேர்ட் FF1 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது TCL நிறுவனத்தின் துணை நிறுவனமான FFALCON ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் CNY 2,499 (சுமார் ரூ. 28,380) விலையில் தொடங்கி செப்டம்பர் 10 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

டிஸ்பிளே அம்சங்கள்

இந்த சாதனம் 120 Hz IPS LCD டிஸ்பிளே, மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் உடன் வெளியாகியுள்ளது.

FFALCON தண்டர்பேர்ட் FF1 மெலிதான பெசல்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்ட காப்ஸ்யூல் வடிவ கட்-அவுட் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது மூன்று கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது.

இந்த கைபேசி 6.67 அங்குல IPS LCD திரையுடன் முழு HD+ தெளிவுத்திறன், 20:9 என்ற திரை விகிதம் மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது கருப்பு மற்றும் பச்சை வண்ண வகைகளில் வழங்கப்படுகிறது.

சிப்செட் & ஸ்டோரேஜ் விவரங்கள்

FFALCON தண்டர்பேர்ட் FF1 ஸ்னாப்டிராகன் 690 5G சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இது 8GB RAM மற்றும் 256GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11 OS உடன் இயங்குகிறது மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,300mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இணைப்பு அம்சங்கள்

இணைப்பிற்கான அம்சங்களைப் பொறுத்தவரை, சாதனம் டூயல்-பேன்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, 5ஜி, GPS மற்றும் டைப்-C போர்ட் ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.

விலை விவரங்கள்

FFALCON தண்டர்பேர்ட் FF1 விலை 8GB/128GB மாடலுக்கு CNY 2,499 (தோராயமாக ரூ.28,380) ஆகவும் மற்றும் 8GB/256GB வேரியண்டிற்கு CNY 2,799 (சுமார் ரூ. 31,790) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கைபேசி செப்டம்பர் 10 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் அதன் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் இன்னும் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Views: - 637

0

0