6.52 இன்ச் டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரியுடன் டெக்னோ POP 5P அறிமுகம் | விலை & விவரங்கள்

Author: Hemalatha Ramkumar
6 August 2021, 10:18 am
Tecno POP 5P announced with 6.52-inch display, 5000mAh battery
Quick Share

டெக்னோ POP 5P என அழைக்கப்படும் புதிய POP ஸ்மார்ட்போனை தொடர் டெக்னோ பிராண்ட் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் 6.52 இன்ச் டிஸ்ப்ளே, இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது.

கைபேசியின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் விற்பனையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ POP 5P விலை விவரங்கள்

டெக்னோ POP 5P போனின் விலை நைஜீரியன் மதிப்பில் NGN 44,000 ஆக, அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.7,900 உள்ளது. ஒரே 2 ஜிபி + 32 ஜிபி சேமிப்பு மாடலுக்கு. இது ரோஸ் கோல்ட் மற்றும் ஏதர் பிளாக் உள்ளிட்ட பல்வேறு வண்ண வகைகளில் வருகிறது.

இந்த தொலைபேசி நைஜீரியாவில் ஜுமியா ஷாப்பிங் போர்ட்டல் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், சர்வதேச கிடைக்கும் தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

டெக்னோ POP 5P விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 6.52 அங்குல HD+ டிஸ்ப்ளே 720 × 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மேலும், வாட்டர்-டிராப் நாட்ச் பேனலுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் பாலிகார்பனேட் உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

டெக்னோ POP 5P 2 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட 1.3 GHz குவாட் கோர் சிப்செட்டை பேக் செய்கிறது. மைக்ரோ SD கார்டு உடன் ஸ்டோரேஜை மேலும் விரிவாக்க முடியும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, தொலைபேசி இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 5 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, சாதனம் 8 மெகாபிக்சல் கேமராவைப் பயன்படுத்துகிறது.

மென்பொருளைப் பொறுத்தவரை, கைபேசி Android 10 (Go பதிப்பு) அடிப்படையிலான HiOS உடன் இயங்குகிறது. 5,000 mAh பேட்டரியும் உள்ளது. சார்ஜ் செய்யும் திறன் குறித்து எந்த தகவலும் இல்லை. பாதுகாப்பிற்காக பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இதில் உள்ளது. முக அங்கீகார வசதியும் உள்ளது.

தொலைபேசி இரட்டை சிம், 4ஜி, டூயல்-பேன்ட் WiFi, ப்ளூடூத் 5.0, GPS, A-GPS, BeiDou, GLONASS ஆகியவற்றை இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது அளவுகளில் 157.7 x 75.7 x 9.5 மிமீ மற்றும் 200 கிராம் எடை கொண்டது.

Views: - 323

0

0