Techno Spark 8 | ஹீலியோ P22 சிப்செட் உடன் புதிய டெக்னோ போன் அறிமுகம் | விலைக்கு ஏற்ற போனா?!

Author: Dhivagar
1 September 2021, 8:43 am
TECNO SPARK 8, with a Helio P22 chipset, goes official
Quick Share

டெக்னோ தனது சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஸ்பார்க் 8 ஐ நைஜீரியாவில் NGN 50,000 (தோராயமாக ரூ.9,000) விலையில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இது 6.5 அங்குல திரை, பின்புறத்தில் இரட்டை லென்ஸ்கள் கொண்ட ஒரு பெரிய கேமரா யூனிட், மீடியாடெக் ஹீலியோ P22 செயலி மற்றும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 8 கீழே ஒரு முக்கிய பெசல் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பின்புறத்தில், பாதுகாப்பான பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் கைரேகை ஸ்கேனருடன் ஒரு பெரிய சதுர வடிவ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த சாதனம் 6.5 அங்குல IPS LCD டிஸ்பிளே உடன் HD+ (720×1600 பிக்சல்கள்) ரெசல்யூஷன் கொண்டது மற்றும் ஒற்றை பச்சை நிற நிழலில் வழங்கப்படுகிறது.

TECNO SPARK 8 பின்புறத்தில் 16MP முதன்மை லென்ஸ் மற்றும் QVGA இரண்டாம் நிலை சென்சார் கொண்டுள்ளது. முன்னால், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 MP ஷூட்டர் ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 8 மீடியாடெக் ஹீலியோ P22 செயலியில் இருந்து 2 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஆற்றல் பெறுகிறது.

உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11 (கோ பதிப்பு) அடிப்படையிலான HiOS 7.6 இல் இயங்குகிறது மற்றும் 10W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பிற்காக, கைபேசி வைஃபை, ப்ளூடூத், GPS மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் ஆகியவற்றுக்கான ஆதரவை வழங்குகிறது.

நைஜீரியாவில், டெக்னோ ஸ்பார்க் 8 தனி 2 ஜிபி RAM /64 ஜிபி மாடலுக்கு NGN 50,000 (தோராயமாக ரூ.9,000) விலைக் குறியைக் கொண்டுள்ளது. இந்தியாவிலோ அல்லது பிற சந்தைகளிலோ அதன் விற்பனை குறித்து இன்னும் விரவங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Views: - 259

0

0