லைவ் ஸ்ட்ரீம் அம்சத்துடன் டெலிகிராம் 8.0 அப்டேட் | முழு விவரங்கள் இங்கே | Telegram Live Stream

Author: Dhivagar
3 September 2021, 11:54 am
Telegram launches live stream feature with version 8.0 update
Quick Share

என்க்ரிப்ட் செய்யப்பட்ட இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம் அதன் புதிய 8.0 அப்டேட்டுடன் குரூப் மற்றும் சேனல்களுக்கு வரம்பற்ற பார்வையாளர்களுடன் லைவ் ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

புதிய அப்டேட்டுடன் மீடியாவில் இருந்து captions ஐ நீக்கவும் மற்றும் ஃபார்வேர்டு செய்யும்போது அனுப்புவோரின் பெயர்களை மறைக்கவும், chat list க்கு திரும்பாமல் unread channel க்கு எளிதாக மாறவும் மற்றும் புதிய அனிமேஷன் ஈமோஜியுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் பேனலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

லைவ் ஸ்ட்ரீம் அம்சத்தை வரம்பின்றி எவ்வளவு பார்வையாளர்கள் வேண்டுமென்றாலும் பயன்படுத்த முடியும், மேலும் அவர்கள் கையை உயர்த்துவதன் மூலம் Broadcast இல் சேரவும் முடியும். 

முந்தைய அப்டேட்டுடன் கிடைத்த குழு வீடியோ அழைப்பு அம்சம், இப்போது நேரடி ஒளிபரப்புக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக உள்ளது. இப்போது வரம்பற்ற பார்வையாளர்களின் ஆதரவுடன் இன்னும் சிறப்பாக மாறியுள்ளது.

பயனர்கள் பல தனிப்பயனாக்குதல் விருப்பங்களுடன் மெசேஜ் சேவையை எப்படி பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். பயனர்கள் அனுப்புநரின் பெயரை மறைக்கலாம் அல்லது மீடியா மெசேஜ்களில் captions ஐ மறைக்கலாம். அவர்கள் அனுப்ப விரும்பாத செய்திகளை தேர்ந்தெடுத்து நீக்கவும் செய்யலாம் மற்றும் தவறான அரட்டையைத் கிளிக் செய்தால் பெறுநரின் பெயரையும் மாற்றலாம்.

பயனர்கள் இப்போது Chat list க்கு திரும்பாமல் சேனல்களை scroll செய்து பார்ப்பதற்கான வசதியையும் இந்த அப்டேட் உடன் பெற்றுள்ளனர். ஃபோல்டர்கள் அல்லது Archieved chat உடன் அரட்டை பட்டியல் சீரமைக்கப்பட்டிருந்தால், இந்த ஆப் பயனர்களால் அமைக்கப்பட்ட அமைப்பையே பின்பற்றும். 

டெலிகிராம் இப்போது ஸ்டிக்கர் பேனலில் `Recently Used’ ஸ்டிக்கர்களின் மேலே ட்ரெண்டிங் ஸ்டிக்கர்களைக் காண்பிக்கும். இதோடு ஸ்டிக்கர் பரிந்துரைகளுக்கான பெரிய preview ம் இப்போது ஆப் அம்சங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் சமீபத்தில் அதன் குரூப் வீடியோ அழைப்பு அம்சத்தை விரிவுபடுத்தி உள்ளது, இது இப்போது ஒரு குரூப் வீடியோ அழைப்பில் 1,000 பேர் வரை சேர அனுமதிக்கிறது.

நிறுவனம் அதன் குழு வீடியோ அழைப்புகளில் 30 பயனர்கள் வரை தங்கள் கேமரா மற்றும் திரை இரண்டிலிருந்தும் வீடியோவை ஒளிபரப்ப அனுமதிக்கிறது. இப்போது 1,000 பேர் ஆன்லைன் நிகழ்வுகளை பார்க்க முடியும்.

Views: - 417

0

0