இந்தியாவில் டெஸ்லா ஆராய்ச்சி மையமா?! சலசலக்கும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்! உண்மை தகவல் என்ன?

21 September 2020, 4:08 pm
Tesla in talks to establish R&D centre in Bengaluru
Quick Share

இந்தியா தனது சாலைகளில் மின்சார வாகனங்களை மிகவும் பொதுவானதாக மாற்றுவதற்கு  கொஞ்சம் கொஞ்சமாக வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில், உலகெங்கிலும் உள்ள மின்சார வாகனங்களின் முன்னோடியும் மற்றும் தலைமையும் ஆக கருதப்படும் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் நுழைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. ஆனால் இப்போது தகவல் என்னவென்றால், டெஸ்லா பெங்களூருவில் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை கொண்டுவரக்கூடும் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கிறது.

எகனாமிக் டைம்ஸ் அறிக்கை

எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, பெங்களூருவில் ஆர் அண்ட் டி மையத்தைத் திறக்க டெஸ்லா கர்நாடக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. 

ஒரு உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் மாநில அரசாங்கத்திடமிருந்தோ அல்லது டெஸ்லாவிடமிருந்தோ எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு, இந்த தகவல் இந்திய வாகனத் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஆச்சரியமில்லை.

மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை நன்கு நிறுவப்பட்ட மற்றும் பாரம்பரிய கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்னோடியாக டெஸ்லா முன்னணியில் உள்ளது. இது அமெரிக்காவிற்கு வெளியே – சீனாவின் ஷாங்காயில் – 2019 இன் பிற்பகுதியில் தனது முதல் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தியைத் தொடங்கியது. அங்கு டெஸ்லா ஒரு உறுதியான காலடியைப் பதிக்க முடிந்தது. 

ஆசியாவில் ஓங்கும் டெஸ்லாவின் கை

தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தலைமையிலான நிறுவனம் தென் கொரியா போன்ற பிற ஆசிய சந்தைகளில் தனது இருப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்களும் வந்துள்ளன, இங்கு  உள்ளூர் நிறுவனங்களுக்கும் மிகவும் கடுமையான போட்டியை டெஸ்லா வழங்கக்கூடும்.

இந்தியாவில் கட்டுப்பாடு

எவ்வாறாயினும், மஸ்க் முன்னர் இந்தியாவில் ஒரு கட்டுப்பாட்டுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி, அது டெஸ்லாவின் நுழைவைத் தடுக்கிறது என்று  தெரிவித்திருந்தார். அதற்கான சலுகைகள் ஏதும் கிடைத்துள்ளதா, டெஸ்லா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறதா? என்பதை பற்றிய தகவல் எதுவும் இல்லை.

இந்தியாவின் மின்சார வாகன கனவுகள் எல்லாம் டெஸ்லா ஆர் அன்ட் டி மையம் இந்தியாவிலும் வந்தால் வேற லெவலில் மாறும் என்பதில் எந்தவித  சந்தேகமும் இல்லை. சரி  டெஸ்லா நிறுவனத்தின் முடிவு என்ன என்பதை சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 7

0

0