பெங்களூரில் பதிவுச் செய்யப்பட்டது டெஸ்லா: எலோன் மஸ்க்கிற்கு கர்நாடக முதலமைச்சர் வரவேற்பு

13 January 2021, 3:58 pm
Tesla R&D Unit Registered In Bangalore Karnataka Chief Minister Welcomes Elon Musk
Quick Share

அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டைத் தொடங்க உள்ளது. இந்தியாவில் இந்த மாதத்திலிருந்து மின்சார கார்களுக்கான முன்பதிவு ஆரம்பமாகும் என்று சமீபத்திய தகவல்கள் வெளியானதை அடுத்து வாகன உற்பத்தியாளரின் வருகையும் உடனடியாக நிகழந்துள்ளது.

டெஸ்லா இப்போது தனது முதல் அலுவலகம் மற்றும் R&D மையத்தை பெங்களூரில் பதிவு செய்துள்ளது. புதிதாக பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் குறித்த கூடுதல் தகவல்கள், அரசாங்க ஆவணம் மூலம் செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்” TESLA INDIA MOTORS AND ENERGY PRIVATE LIMITED என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. R&D அலுவலகத்திற்கு வைபவ் தனேஜா, வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகிய  மூன்று இயக்குநர்களையும் நிறுவனம் நியமித்துள்ளது. அவர்கள் 2021 ஜனவரி 8 அன்று நியமிக்கப்பட்டனர்.

சமீபத்திய அறிக்கையின்படி, நிறுவனம் தனது முதல் காரை ஜூன் 2021 இல் அறிமுகப்படுத்தும். மாடல் 3 க்கான முன்பதிவு 2021 ஜனவரியில் ஆரம்பமாகும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. டெஸ்லா மாடல் 3 க்கான முன்பதிவு கடந்த 2016 ஆம் ஆண்டிலும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்,  மின்சார வாகன கொள்கைகள் மற்றும் இறக்குமதி வரிகள் காரணமாக நாட்டில் வெளியீடு தாமதமானது.

டெஸ்லா தனது மலிவு வாகனமான மாடல் 3 ஐக் கொண்டு தனது மின்சார கார் விற்பனையைத் தொடங்கும். மின்சார கார் மாறுபாட்டைப் பொறுத்தவரையில், இது ஒரே சார்ஜிங் மூலம் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான ஓட்டுநர் வரம்பை வழங்கும் திறன் கொண்டுள்ளது. இது 0 முதல் மணிக்கு 100 கிமீ வேகத்தை 3.5 விநாடிகளுக்குள் எட்டக்கூடிய நல்ல செயல்திறன் வழங்கும் அம்சங்களையும் புள்ளிவிவரங்களையும் கொண்டுள்ளது.

Leave a Reply