முகத்தின் மீது முகமூடியை வீசும் துப்பாக்கி… என்ன மாதிரி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…!!!

25 August 2020, 8:24 pm
Quick Share

இந்த பாழா போன கொரோனா வைரஸானது நம் அனைவரையும்  வீடுகளில் பூட்டு வைத்துள்ளதை தவிர, திருடர்களை போலவே  முகமூடி அணிய வேண்டிய கட்டாயத்தில் தள்ளி உள்ளது. இருப்பினும், உலகில் சிலருக்கு, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சதவீத அமெரிக்கர்களுக்கு, முகமூடி அணிவது அவர்களின் சுதந்திரத்திற்கு எதிரானது. இந்த யோசனையின் வெளிச்சத்தில், முகமூடி அணிவதற்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. எனவே, இந்த “முகமூடிகளின்” முகங்களை மறைக்க, யூடியூபராக மாறிய ஒரு பொறியியலாளர் “மாஸ்க் கன்” ஒன்றை உருவாக்கியுள்ளார்.

“சைபர்பைக்கை” உருவாக்குவது மற்றும் கூகிள் குரோமில் 6000 டேபுகளை ஒரே சமயத்தில் திறப்பது போன்ற அனைத்து வகையான பைத்தியக்காரத்தனங்களையும் யூடியூபர்கள் செய்வதை நாம் பார்த்திருப்போம்.  இருப்பினும், மற்றவர்களின் முகங்களில் முகமூடியை வீசும் துப்பாக்கியை பார்ப்பது நமக்கு இதுவே முதல் முறையாகும். 

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மின்சார பொறியியலாளரும், யூடியூபில் பிரபலமான DIY கலைஞருமான ஆலன் பான், முகமூடி அணிவதை எதிர்த்து போராடும் நபர்கள் தனது படைப்பின் சுவையை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் படைப்பான ஒரு DIY துப்பாக்கி உண்மையில் ஒரு முகமூடியை உங்களை நோக்கி வீசுகிறது. இது தானாக முகத்தை சுற்றி வருகிறது. பான் அதை “மாஸ்க் கன்” என்று அழைக்கிறார்.

யூடியூபர் தினசரி பயன்படுத்தும் சில பொருட்களை எடுத்து, தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார். மேலும் முகமூடி அணியாதவர்கள சரிகட்டும் விதமாக இந்த சாதனத்தை ஒன்றிணைத்தார். அவர் தனது “மாஸ்க் கன்” ஐ உருவாக்க ஒரு பிரேக் லைன், 800 PSI Co2 குப்பி, ஒரு சோலனாய்டு வால்வு, பெயிண்ட் பிஸ்டல் பிடி மற்றும் அறுவை சிகிச்சை முகமூடிகளில் பொருத்தப்பட்ட சில காந்த எறிபொருள்களைப் பயன்படுத்தினார். இந்த செய்முறையை எளிதாக்க அவர் ஒரு லேசர் ப்ரொஜெக்டரை துப்பாக்கியின் முன்னால் வைத்தார். அவர் இந்த துப்பாக்கியை உருவாக்கும் முறையை அறிய கீழே உள்ள  வீடியோவை நீங்கள் பார்க்கலாம்.

பொருட்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து துப்பாக்கியை எழுப்பிய பிறகு, பான் அதை தன் மீது  சோதித்து பார்த்தார். சில வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிறகு, அவர் அதை “ஹண்டிங்டனின் கடற்கரைக்கு” ​​எடுத்து  சென்றார். அங்கு முகமூடி அணிவதற்கு எதிரான அனைத்து போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

Views: - 34

0

0