உலகின் டாப் 5 வேகமான கார்கள் என்னென்ன தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க!

5 July 2021, 2:22 pm
The top 5 fastest cars in the world
Quick Share

டெஸ்லா போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் சிறந்த திறன் கொண்ட எலக்ட்ரிக் கார்கள் மற்றும் எதிர்கால வடிவமைப்புடனான கார்களை உருவாக்கி வரும் அதே வேளையில், வாகன உற்பத்தியாளர்கள் வழக்கமான பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களிலும் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் உலகின் டாப் 5 வேகமான கார்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆஸ்டன் மார்ட்டின் DBS சூப்பர்லெகெரா: விலை சுமார் ரூ.5 கோடி

Aston Martin DBS Superleggera

பிரிட்டிஷ் வாகன உற்பத்தியாளரான ஆஸ்டன் மார்ட்டின் சமரசமற்ற திறன் வாய்ந்த வாகனங்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது மற்றும் சமீபத்திய DBS சூப்பர்லெகெரா அவற்றில் ஒன்று.

715 bhp, 5.2 லிட்டர், இரட்டை-டர்போ V-12 இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த கூபே பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வேகத்தில் வெறும் 3.2 வினாடிகளில் வேகமாகச் செல்லக்கூடியது. மேலும் சில விநாடிகளில் மணிக்கு 340 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.

ஃபோர்டு GT: விலை சுமார் ரூ.3.2 கோடி

The top 5 fastest cars in the world

இந்த பட்டியலில் ஒரு ஃபோர்டு காரும் உள்ளது, இதன் வடிவமைப்புத் துவங்கும்போது இதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஹைபர்காரைப் பொறுத்தவரை, ஃபோர்டு GT 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 647 bhp ஆற்றலை உருவாக்கும். இந்த கார் வெறும் 3 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது மற்றும் மணிக்கு 348 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

லம்போர்கினி அவென்டடோர் SVJ: விலை ரூ.6.25 கோடி

The top 5 fastest cars in the world

லம்போர்கினி அவென்டடோர் SVJ மிகவும் செம்மயான ஒரு கார் மாடல். இந்த கார் மாடல் இத்தாலியில் குறைந்த எண்ணிக்கையில் கையால் தயாரிக்கப்பட்டது. இந்த ஹைப்பர்கார் 6.5 லிட்டர், 48-வால்வு V-12 இன்ஜினிலிருந்து 759 bhp அதிகபட்ச சக்தியை உருவாகும் திறன் கொண்டது.

இதன் விளைவாக, அவென்டடோர் SVJ வெறும் 2.8 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தில் வேகமாகச் செல்லும். அதே போல மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும்.

புகாட்டி சிரோன் ஸ்போர்ட்: விலை சுமார் ரூ.21.22 கோடி

The top 5 fastest cars in the world

1,479 bhp, 2.4 வினாடிகளில் 0-100 கிமீ வேகம், மற்றும் மணிக்கு 420 கிமீ வேகத்தில் (மின்னணு ரீதியாக வரையறுக்கப்பட்ட) செல்லவும் திறன் கொண்டது இந்த புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார். இன்றுவரை உலகின் அதிவேக காரில் ஒன்றான புகாட்டி சிரோன் ஸ்போர்ட் இடம்பிடிக்கிறது. கையால் செய்யப்பட்ட இந்த நான்கு சக்கர வாகனம் உலகின் அதிவேக புல்லட் ரயிலை விட வேகமாக செல்லக்கூடியது.

இப்படி ஒரு செயல்திறனை வழங்க, சிரோன் ஸ்போர்ட் ஒரு 8.0 லிட்டர் குவாட்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட W-16 இன்ஜினைக் கொண்டுள்ளது.

கோனிக்செக் ஆகெரா RS: விலை சுமார் ரூ.30 கோடி

கின்னஸ் உலக சாதனையின் படி, சாலைகளில் ஓட்டக்கூடிய உலகின் அதிவேக கார் என்றால் கோனிக்செக் ஆகெரா RS தான்.

1,160 hp செயல்திறன் மிக்க இந்த சூப்பர் கார் முதல் ஓட்டத்தில் 436 கிமீ வேகத்தையும், இரண்டாவது ஓட்டத்தில் 456 கிமீ வேகத்தையும் எட்டியது. அதாவது, சராசரியாக 447 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

Views: - 218

0

0