டிவி பார்த்துக்கொண்டே பீட்ஸா சாப்பிட சம்பளம்…. அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

18 January 2021, 2:53 pm
This Company Will Pay You $500 to Watch Netflix and Eat Pizza
Quick Share

யாராச்சும் நெட்ஃபிலிக்ஸ் பார்த்துக்கிட்டு பீட்ஸா சாப்பிட்டுக்கிட்டு சும்மா தூங்கிகிட்டு இருந்தா சம்பளம் கொடுப்பாங்களா? நம்ம சொந்த வீட்டுல இதை பண்ணினா கூட அப்பா அம்மா கிட்ட திட்டி வாங்கியே சலிச்சு போயிடும். ஆனா, இத பண்றதுக்கு உங்களுக்கு ஒருத்தர் காசு கொடுத்தா எப்படி இருக்கும்னு நீங்க கனவுலயாச்சும் நினைச்சு பார்த்திருக்கீங்களா? கண்டிப்பா மாட்டீங்க. ஆனா, அது நிஜத்துலையே நடக்குதுனு தெரிஞ்சா உங்க ஆச்சரியம் எந்த அளவுக்கு இருக்கும். 

இதெல்லலாம் கேட்க உங்களுக்கு ஒரு கனவு மாதிரி தோனலாம். ஆனால், உண்மையிலேயே ஒரு நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் பாத்துகிட்டு, பீட்ஸா சாப்பிட்டு தூங்க பணம் கொடுக்க தயாராக இருக்கு. அமெரிக்காவைச் சேர்ந்த போனஸ் ஃபைண்டர் (Bonus Finder) அப்படிங்கிற நிறுவனம் தான் Binge Watcher அப்படினு சொல்லக்கூடிய இந்த வேலைக்கு ஆள் தேடிகிட்டு இருக்காங்க.

2021 ஆம் ஆண்டு தொடங்கியும், ஊரடங்கு இன்னும் முழுமையா முடியாததுனால, விளம்பர நோக்கத்திற்காக நெட்ஃபிலிக்ஸ் பார்க்கவும் மற்றும் பீட்ஸா சாப்பிடவும் சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாக போனஸ்ஃபைண்டர் நிறுவனம் தெரிவிச்சிருக்கு.

தேசிய பீட்ஸா தினம் பிப்ரவரி 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, இந்த வேலைக்கு மக்கள் தேர்வு செய்யப்படுவாங்க. நெட்ஃபிலிக்ஸ் பார்த்துக்கிட்டே பீட்ஸா சாப்பிட  500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 36,600 ரூபாய் வழங்கப்படும்.

உண்மையிலேயே இந்த வேலைக்கு எந்த கண்டிஷனும் கிடையாது. நெட்ஃபிலிக்ஸ்ல பார்க்குற சீரிஸ் மற்றும் படங்களுக்கு ரிவியூ மற்றும் ரேட்டிங் கொடுக்கணும். அதுவும் இந்த வேலையோட ஒரு பகுதி தான். நடிப்பு, சீரிஸ் முடிவுகள் மற்றும் கதைக்களம் போன்றவற்றின் அடிப்படையில இதற்கான  ரிவியூ மற்றும் ரேட்டிங் கொடுக்கணும்.

அதேபோல், சாப்பிடும் பீட்ஸாவுக்கும் ரேட்டிங் கொடுக்கணும். பீட்ஸாவின் தரம், டாப்பிங்ஸ், சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் பீட்ஸாவை மதிப்பீடு செய்யனும்.

இதெல்லாம் செஞ்சாலே உங்களுக்கு செம சம்பளம் கிடைக்கும்…கரும்பு தின்ன கூலியானு கேக்குற மாதிரி இதை யாராச்சும் வேண்டாம்னா சொல்வாங்க! இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க, இந்த மாதிரி ஒரு வேலை கிடைச்ச நீங்க போவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க… !

Views: - 0

0

0