DSLR உடன் போட்டியிடும் புதிய சியோமி ஸ்மார்ட்போன்! விவரங்கள் இங்கே

3 May 2021, 10:55 am
This new phone of XIAOMI coming to compete with DSLR
Quick Share

சியோமி நிறுவனம் Mi 11 தொடரில் Mi 11 X புரோ, Mi 11 X மற்றும் Mi 11 அல்ட்ரா ஆகிய 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரீமியம் தொலைபேசி Mi 11 அல்ட்ரா தான். இந்த ஸ்மார்ட்போன் Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.69,999 ஆகும்.

Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.8 அங்குல 120Hz OLED டிஸ்ப்ளே கிடைக்கிறது, இது 2K தெளிவுத்திறனுடன் கிடைக்கிறது. ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் முக்கியமாக கவரும் அம்சம் என்றால் அதன் கேமரா தான். 3 பின்புற கேமரா அமைப்புடன் இந்த தொலைபேசியில் கிடைக்கிறது. இது 50 MP முதன்மை லென்ஸ், 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5x பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் கேமரா தரம் DSLR க்கே சவால் விடும் அளவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Mi 11 அல்ட்ரா 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் சிறப்பு விஷயம் என்னவென்றால், இது வேகமான சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது, இது 67W ஆகும். தொலைபேசி 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. அதாவது, நீங்கள் மற்றொரு வயர்லெஸ் சார்ஜிங் தொலைபேசியையும் சார்ஜ் செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல், இந்த போனுடன் 55W வேகமான சார்ஜரும் வழங்கப்படுகிறது.

Views: - 88

0

0

Leave a Reply