சீன டிக்டாக்கின் திடீர் முடிவு… சோகத்தில் குழந்தைகள்…நடந்தது என்ன…???

Author: Hemalatha Ramkumar
23 September 2021, 5:50 pm
Quick Share

டிக் டாக் போன்ற ஒரு செயலியான டூயின் என்ற சீன பதிப்பு இப்போது ‘டீனேஜ் மோட்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 14 வயதிற்குட்பட்ட குழந்தை ஒரு நாளைக்கு 40 நிமிடங்களுக்கு மேல் குறுகிய வீடியோ செயலி இல் செலவிடாதவாரு பார்த்து கொள்ளும்.

தாய் நிறுவனமான பைட் டான்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து பயனாளிகளும் தங்கள் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பயன்பாட்டில் பதிவுசெய்து கொள்ளலாம். இந்த பயனாளர்கள், தங்கள் செயலியில் இரவு
10:00 முதல் காலை 6:00 மணிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த நிறுவனம்,குழந்தைகள் தங்கள் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தி பயன்பாட்டில் உள்ளே நுழைந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளது. இல்லையென்றால், கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்க பயன்பாட்டில் ‘டீனேஜ் மோட்’ ஐ செயல்படுத்த அவர்கள் கடுமையாக வலியுறுத்துகின்றனர்.

மேலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் பரிசோதனைகள், கலை கண்காட்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய கல்வி உள்ளடக்கத்தை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

டூயினின் என்ற இந்த செயலி ஆனது,சீனாவின் விதிமுறைகளுக்குப் உட்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வரப்போகிறது.மேலும் ஆன்லைன் கேமிங் மற்றும் ஆன்லைனில் தனியார் பயிற்சிக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போதைய விதிமுறைபடி,18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வார நாட்களில் விளையாட தடைசெய்கிறது. மேலும் வார இறுதி நாட்களில் மூன்று மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கிறது.
குழந்தைகள் மீது சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கம் மற்றும் அடிமையாக்கும் தன்மை பற்றிய பல ஆய்வுகளின் விளைவாக இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Views: - 295

0

0