ஆப்பிள் CEO வின் சம்பளம் இத்தனை ஆயிரம் கோடியா?! Tim Cook Salary | Apple Shares | $750 Million

Author: Hemalatha Ramkumar
27 August 2021, 4:50 pm
Tim Cook to Receive $750 Million Worth of Apple's Stock This Week
Quick Share

ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு அடுத்து ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரியானவர் டிம் குக். 

இவரின் பத்தாண்டு கால பதவியில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11 மடங்கு உயர்ந்துள்ளதை அடுத்து தனது ஊதிய ஒப்பந்தத்தின் இறுதி தவணையாக 750 மில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5518 கோடி ரூபாயை ஊதியமாக பெறுகிறார். 

ப்ளூம்பெர்க் தகவலின்படி, இந்த தவணை ஆப்பிள் நிறுவனத்தின் 50 லட்சம் பங்குகளை உள்ளடக்கியது. இதனை அடுத்து மொத்தமாக சுமார் 750 மில்லியன் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, வரையறுக்கப்பட்ட பங்குகளை மட்டுமே பெற்றார் டிம் குக். அதனையடுத்து, 2025 ஆண்டு வரை டிம் குக் அவர்களே தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க வேண்டிய நிலை இருந்தது.

ப்ளூம்பெர்க்கின் கோடீஸ்வரர் பட்டியலின் படி 60 வயதாகும் டிம் குக் அவர்களின் சொத்து மதிப்பு $ 1.5 பில்லியன் ஆகும். 2020 ஆம் ஆண்டிற்கான உயர் ஊதியம் பெறும் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒப்பிடுகையில் இவரின் ஊதியம் மிகவும் சாதாரணமானதாகவே இருந்தது. அப்போது அவருக்கு ஊதியமாக $ 14.7 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அது அப்படியே $750 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், முன்பு ஒரு முறை கூறுகையில் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும், அவருடைய செல்வத்தின் பெரும்பகுதியை கொடுத்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Views: - 967

0

0